SHARE

யாழ்ப்பாணத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக நீதிமன்ற செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது குரங்கு கூட்டம் ஒன்று நீதிமன்ற வழக்கை நிறுத்தியுள்ளது.

நீதிமன்ற கூரையின் மீது குரங்குகள் ஏரி கூச்சலிட்டமையினால் வழக்கு விசாரணைகள் நிறுத்தப்பட்டு, குரங்குகளை துரத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாண நகரில் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளமையால், அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.

குரங்கு கூட்டங்களினால் அதிகமாக பாதிக்கப்படுவது யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் அதற்கு அருகில் உள்ள அரசாங்க அலுவலகங்களாகும். இதன் காரணமாக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.