SHARE

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது ஜனாதிபதியாகப்  பதவிவகித்த மைத்திரிபால சிறிசேனவே அதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அனுரகுமார திஸாநாயக்க  அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் அதிகாரி எம்முடன் உள்ளார். எனவே நிச்சயமாகத்  தீர்வு வரும். உயிர்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குறித்து 2025 ஆம் ஆண்டிலாவது உண்மையை கண்டறியவேண்டுமென கனடாவில் உள்ள கத்தோலிக்க சமுகம் எதிர்பார்க்கின்றது.

உயிர்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார் எனத்  தெரியுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது கூறியுள்ளார். தாக்குதல் நடைபெற்ற போது அவர்தான் ஜனாதிபதி. அவருக்குத் தான் இது தொடர்பான முழுபொறுப்பும் உள்ளது.
இத் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் அதிகாரி நம்மோடு உள்ளார். எனவே கண்டிப்பாகத்  தீர்வு கிடைக்கும் இவ்வாறு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email