SHARE

பிரித்தானியாவின் பாராளுமன்ற தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் வாக்குகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திகளாக உள்ளனர். அந்தவகையில் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழினப்படுகொலைக்கு நீதியும் தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் வழங்கவேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் தமிழ் இளையோர் கட்சிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்களில் கைகோர்த்துள்ளனர்.

இந்நிலையில், பிரித்தானியாவின் தொழிற்கட்சியின்
மிச்சம் மோடன் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனால்ட் (Hon. Siobhan McDonagh MP) அவர்களின்
பிரச்சாரப் பணியில் பெருந்திரளான தமிழ் இளையோர் களமிறங்கியுள்ளனர்.

ஸ்ரீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியாக ஏற்றுக் கொண்டு நீதி வழங்க வேண்டும், யுத்தக் குற்றவாளிகளில் ஒருவரான இராணுவ தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா மீது பிரித்தானியா தடை விதிக்கவேண்டும், தமிமீழ தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தொழில்கட்சிக்கு ஆதரவு வழங்க தமிழர்கள் முன்வந்துள்ளனர்.

பிரித்தானிய தொழிலாளர் கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour)
அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற இந்த அரசியல் பணியை, இளம் அரசியல் செயற்பாட்டாளர்களான தனுஷாத் மரியநேசன் ஆகியோர் தலைமையில் டிலான் சசிகரன், ஜெஸ்லின் உதயராணி யோகானந்தம், சிறிஸ்காந்தன் சின்னத்துரை, அல்பேட் பிறிற்றோ அன்ரன் ஐருசான், இரத்தினசிங்கம் வைகுந்தகுமார், வசந்தன்குமார் பாலசரஸ்வதி, குணசிங்கம் ஜிறோசன், சந்திரவர்மன் மேகலக்சன், சந்திரபர்மன் நிலானி, தங்கவேலு சுதாகரன், துஷாந்தன் செல்வரஞ்சன், அன்ராணி உதயகுமரன் ரொனால்ட், இரத்னசிங்கம் ஜனனன், விதுஷன் கணேசமூர்த்தி, புஸ்பகாந் சிவலிங்கம், முகமது இசத் தல்ஹா ஆகிய செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email