SHARE

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பிரித்தானியாவின் அனைத்து கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரித்தானியாவில் வாழும் பெரும் தொகையான ஈழத்தமிழரின் வாக்குகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லன. அந்தவகையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நிபந்தனை அடிப்படையில் தமது ஆதரவை வழங்குவதன் மூலம் ஈழத்தமிழருக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதியும், தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் தேடும் இராஐதந்திர நகர்வை பிரித்தானிய வாழ் ஈழத்தமிழ் இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியாக ஏற்றுக் கொண்டு நீதி வழங்க வேண்டும், யுத்தக் குற்றவாளிகளில் ஒருவரான இராணுவ தளபதி பிரிகேடீயர் சவேந்திர சில்வா மீது பிரித்தானியா தடை விதிக்கவேண்டும், தமிமீழ தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே மேற்படி தமிழ் இளையோர் பழமைவாத கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

அந்தவகையில், தமிழ் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தர முன்வந்துள்ள பழமைவாத கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் மீண்டும் தெரிவுசெய்வதற்கும், பழமைவாத கட்சியே மீண்டும் அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் ஆதரவுதேடி தேர்தல் பிரச்சார பணிகளில் தமிழ் இளையோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரித்தானியாவின்  கரோ கிழக்கு (Harrow East) தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மான் (Hon. Bob Blackman CBE MP) அவர்களின் பிரச்சாரப் பணியில் பெருந்திரளான தமிழ் இளையோர் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானிய பழமைவாத கட்சிக்கான தமிழர்கள் (British Tamil Conservatives) அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற இந்த அரசியல் பணியை,  செயற்பாட்டாளர்களான ஆயுட்சன் அருள்தாஸ், சசீஸ்கண்ணா நடராசா ஆகியோர் தலைமையில் அனுஷன் பாலசுப்பிரமணியம், அமல்ராஐ் ஜெயக்குமார், ஏஞ்சலோ நிருஷன் கதிராமர் , தனபால் சுப்ரமணியம், இன்பறாஜ் பத்திநாதர், சத்தியதேவன் தேவயான்சன், சிவசிதம்பரம் கோகுலன், பவிலன் ஐயம்பிள்ளை, றூபன் மத்தியாஸ், ரவிச்சந்திரன் சதுசன் ஆகிய செயற்பாட்டாளர்கள் குழுவினர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email