SHARE
image_pdfPRINT

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரி யாழ் பல்கலை மாணவர்களால் இன்று போராட்மொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில், மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டமை குறித்தும் மாணவர்கள் தமது  கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.