SHARE

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் வடக்கு, கிழக்கில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் பிரித்தானிய பிரதமருக்கு மனு ஒன்று இன்றுகையளிக்கப்பட்டது

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமெங்கிலுமுள்ள தமிழர்கள் போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.அந்தவகையில் பிரித்தானியாவில் இடம்பெறும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பிரதமர் அலுவலகத்தில் மனுகையளிப்பு இடம்பெற்றுள்ளது.

இம் மனுவில் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா, முன்னாள் இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஐபக்‌ஷ மற்றும் கோத்தபாய ராஐபக்‌ஷ உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை பின்பற்றி பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும் எனவும், அனைத்து ஆதாரங்களும் சமர்பிக்கபட்ட பின்னரும் FDCO நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு எமாற்றத்தை தருவதாகவும் அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் அண்மையில் பாதிக்கபட்ட தமிழர்களிற்கு சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்திதருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மனுவினை, மே 2009 இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்திடம் சரண்டைந்த பின் காணமல் ஆக்கபட்டவர்களான திரு பாலச்சந்திரன் சின்னத்தம்பியின் மனைவி திருமதி ரஞ்சனி பாலச்சந்திரன், திரு சுவமிநாதன் தயாசிறி குடும்பத்தின் உறவினர்ராகிய திரு லூக்காஸ் ஜோசப் செல்வநாதன், நல்லம்மா அருளானந்தம் அவர்களின் உறவினர் மரியமோட்சசலாக்கினி வரதராசா மற்றும் 1983ம் ஆண்டு காணமல் ஆக்கபட்ட திரு ரகுநாதன் தாமோதரம்பிள்ளையின் மனைவி ரஞ்சினிதேவி ரகுநாதன், 1996ம் ஆண்டு கணாமல் ஆக்கபட்ட நடராஜா கீதாரட்ணம் அவர்களின் உறவினர் திருமதி செல்வகுமாரி லோகநாதன், 1996ம் ஆண்டு கணாமல் ஆக்கபட்ட குமுதனி அவர்களின் உறவினர் திருமதி நித்தியகல்யாணி ஜெயகுமாரன் ஆகியோர் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் கையளித்தனர்.

Print Friendly, PDF & Email