SHARE

2009 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பிரதமரின் வாசஸ்தல முன்றலிலும் ஒக்ஸ்போர்ட் நகரில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்ச்சியுடன் இடம்பெற்றது.

இதில் குறிப்பாக இலங்கையில் யுத்தத்தின் போது இறந்தவர்களின் பெயர் விபரங்கள் செயற்பாட்டாளர்களினால் கணக்கெடுக்கப்பட்டன.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த நிலையிலும் இன்றுவரை யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களோ பட்டியலோ யாரிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (HRDAG) ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துவருகின்றன. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை ஆவணப்படுத்தி சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதியை சட்டரீதியாக நிரூபிக்க முடியும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வில் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணியை செயற்பாட்டாளர்களான சசிகரன் செல்வசுந்தரம், மனுமயுரன் கிருபானந்த மனுநீதி, வாகீசன் விசாகரெடனம், இராசரெட்னம் பிரசாந்த், ரகுநாதன் டினேஷ், அமல்ராஜ் ஜெயக்குமார், நிலக்க்ஷன் சிவலிங்கம், கஜானன் செல்வராசா, கனகசபாபதி கார்த்திகேஷன், கணேசலிங்கம் எபினேசர், பிரகலாதன் சிவகுருநாதன், சிவநாதன் டிலக்சன், ரோய் ஜாக்சன், வானுசன் தங்கவேலாயுதம், சர்வேந்தனி பேரின்பநாயகம் ஆகியோர் முன்னெடுத்திருந்தார்கள்.

அதேவேளை ஒக்ஸ்போர்ட்டில் உள்ள தமிழர் வரலாற்று மையத்தில் இடம் பெறும் நிகழ்வுகளை செயற்பாட்டாளர்களான விஜய் விவேகானந்தன், விதுரா விவேகானந்தன், டிலக்‌ஷன் மனோரஜன், பிரசன்னா பாலச்சந்திரன், கபிலன் அன்புரெத்தினம், பதிசன் பாலுராஜ், நாகராஜா லம்போதரன், புவனேந்திரன் சிவராம் துவாரகன், குமாரகுலசிங்கம், கனிஷ்டன் விமலதாசன், லக்ஷ்மன் திருஞானசம்பந்தர், சதேந்லொயிற்றன் புயலேந்திரன் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.

இறந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை உடன் வழங்க முடியாதவர்கள் பின்னர் இணையத்தில் உள்ள இலத்திரன்கள் படிவம் மூலமாகவோ (https://itjpsl.com/reports/counting-the-dead) அல்லது itjpsl@gmail.com , countingthedead@gmail.com info@hrdag.org ஆகிய மின்னஞ்சல் முகவரிகள் ஊடாகவோ அனுப்பி வைக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்படுகின்றது.

Print Friendly, PDF & Email