SHARE

சுயநிர்ணய உரிமைக்கும் சமாதனத்திற்கும் நீதிக்குமாக சிறிலங்காவில் தமிழ் மக்கள் புரிந்த தியாகங்களை நினைவூட்டிக் கொள்வதற்கான தருணம் இதுவாகும். அத்தோடு பிரித்தானியாவிற்கு தமிழ்ச் சமூகம் வழங்கும் பெரும் பங்களிப்பிற்கு எனது நன்றியை தெரிவிப்பதன் மூலம் இத்திருநாளை நானும் கொண்டாட விளைகிறேன் என பிரித்தானிய தொழிற் கட்சியின் தலைவர் கியெர் ஸ்ராமர் தெரிவித்துள்ளார்.

தமிழர் தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களிள் அறுவடைத்திருநாளாகிய தைப்பொங்கலை பிரித்தானியாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் கொண்டாடும் தமிழர்களுக்கு எனது இதமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறீலங்காவில் நிலவும் பொருண்மிய நெருக்கடிகள் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்படும் துன்பங்கள் அரசியல் உறுதிநிலையின்மை ஆகியவற்றையிட்டு நான் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளேன். மனித உரிமைகளையும் நீதியையும் வலியுறுத்தும் தமிழ்ச் சமூத்தோடு தொழிற் கட்சி தொடர்ந்து பணியாற்றும். நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இனியும் சிறீலங்கா அரசாங்கம் காலம் தாழ்த்தமுடியாது என்பதை முன்னின்று உறுதிப்படுத்த வேண்டிய நிதர்சனமான பொறுப்பு பிரித்தானிய அரசாங்கத்திற்கு உண்டு.

பொங்கலைத் தயார்படுத்தி அதனை ஒன்றாக அமர்ந்துண்டு நன்றி நவில்ந்து கொண்டாட நீங்கள் தயாராகும் இவ்வேளையில் தொழிற் கட்சியைச் சேர்ந்த அனைவரின் சார்பிலும் உங்கள் அனைவருக்கும் பெரு மகிழ்வும் அமைதியும் ததும்பும் பொங்கல் வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர்களின் தலைவர் சென் கந்தையா தனது பொங்கள் வாழ்த்து செய்தியில்,

”சுயநிர்ணய உரிமைக்காவும் நீதிக்காகவும் தமிழ் மக்கள் புரிந்த தியாகங்களை அங்கீகரித்து உலகெங்கும் வாழும் தமிழர்களின் திருநாளாகிய இன்று தொழிற் கட்சித் தலைவர் விடுத்திருக்கும் செய்தியை நாம் வரவேற்கிறோம். பிரித்தானிய அரசாங்கத்தின் வினைத்திறனாற்றலை வலியுறுத்தி அவர் விடுத்திருக்கும் செய்தியின் பெறுபேறாகஇ கடந்த சில நாட்களுக்கு முன் கனடாவில் நிகழ்ந்தது போன்று சிறீலங்காவின் அரசியல் தலைவர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும்.” என கோரிக்கை விடுத்தள்ளார்.

Thai-Pongal-Message-2023

Print Friendly, PDF & Email