SHARE

200 மில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வங்கி நேற்று வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத, பங்களாதேஷ் மத்திய வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இலங்கை, 2021 மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொண்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், அந்தக்கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டது.

இலங்கை அந்நிய செலாவணி இருப்புக்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில், குறித்தக் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்தது.

புதிய காலக்கெடுவின்படி, இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

Print Friendly, PDF & Email