SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஜனாதிபதி ரணிலின் வருகைக்கு எதிராக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதில் வீதியை மறித்து போராட்டத்தை முன்னோக்கி செல்விடாது தடுத்து நின்ற பொலிஸார் மற்றும் இராணுவத்திற்கு, தாய்மார் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வீதி மறியல்களை அகற்றும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.