SHARE

நாடாளவிய ரீதியில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.

பரீட்சார்த்தமான முறையில் QR குறியீட்டின் கீழ் எரிபொருள் வழங்கும் நடைமுறை வெற்றியளித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சார்த்த நடைமுறையின் கீழ் 4,708 வாகனங்கள் வெற்றிகரமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வழிவகைகள் செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

அதேவேளை QR குறியீட்டினை பெறாதவர்கள் வீணாக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் இலக்க முறைப்படி எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட போதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் பல பிரதேசங்களில் மக்கள் சிரமத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.  

Print Friendly, PDF & Email