SHARE
செல்வநாதன்
செல்வநாதன் (NEWSREPORTER)

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவை போர்க்குற்றங்களில் ஈடுபட்டமைக்காக உடனடியாகக் கைதுசெய்யக்கோரி சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பின் (ITJP) சட்டவாளர்கள் குற்றவியல் முறைப்பாடு ஒன்றினை சமர்ப்பித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஜனாதிபதிக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி எழுந்த மாபெரும் மக்கள் கிளர்ச்சியால் சிறிலங்காவிலிருந்து தப்பியோடியதுடன் தனது பதவியையும் இராஜினாமா செய்து தற்போது சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள நிலையிலேயே அவருக்கு எதிராக மேற்படி முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் உள்நாட்டுபோர் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராகவிருந்த கோட்டபாய ஜெனிவா உடன் படிக்கைகளில் பாரதூரமான மீறல்களில் ஈடுபட்டுள்ளார் என்றும் அவை சர்வதேச சட்ட அதிகார வரம்பின்கீழ் சிங்கபூரிலேயே விசாரணைக்கு உட்படுத்த தகுந்த குற்றங்கள் என்றும் 63 பங்கங்களை கொண்ட ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றவியல் ஆவணத்தில் கொலை படுகொலை சித்திரவதை மனித நேயமற்ற நடத்தை பாலியல் வன்புணர்வு இரத பாலியல் ரீதியான வன்முறைகள், உரிமைகளை தடுத்தல், மோசமான உடல் உளரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தல் பட்டினி ஆகிய குற்றச்செயல்கள் அதில் அடங்குவதுடன் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்களை கொலைசெய்யுமாறு இராணுவத்தினருக்கு கோத்தபாயவே நேரடியாக கட்டளையிட்டார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உயர் தப்பியவர்கள் இராணுவத்தினரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் போரின் முடிவில் படைவீரர்களால் எடுக்கப்பட்ட தமிழ் பெண்களில் பாலியல் அவயங்கள் மற்றும் சிதைக்கப்பட்ட சடலங்களை காட்டும் புகைப்படங்களும் இவ்வாவணத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

தமது சட்டவாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றவியல் முறைப்பாடு தொடர்பில் ITJP வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு

https://itjpsl.com/assets/Tamil-Press-release-24-july-2022.pdf

Print Friendly, PDF & Email