SHARE

மறைந்த ஊடகவியலாளர் மயில்வானகம் நிமலராஜன் படுகொiலை செய்யப்பட வழக்கிழல் தொடர்புடைய சந்தேக நபர் பிரித்தானிய போர்க்குற்ற விசாரணைக்குழு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையை மனித உரிமை அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.

சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) , சித்திரவதைகளுக்கு முடிவுகட்டுதல் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கான நீதியை பெற்றுகொடுக்கும் அமைப்பான REDRESS மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் குழு (JDS) ஆகிய இணைந்தே மேற்படி பொலிஸாரின் கைது நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.

இது குறித்து அவர்கள் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலையானது இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான இரத்தக்களரியின் தொடக்கமாக இருந்தது. பிபிசி யின் பத்திரிகையாளரை கொன்றவர் இங்கிலாந்தில் மறைந்திருந்தார் என்பது வெறுக்கத்தக்கது. இந்நிலையில் பிரித்தானியாவின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001 இன் பிரிவு 51 இன் கீழ் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது போர்க்குற்ற வழக்குகளை விசாரிக்க பிரித்தானியா அனுமதிக்கிறது என்ற சிற்நத எடுத்துக்காட்டை வெளிப்படுத்தி நிற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

Nimalarajan_press_release_25022022_.docx_4_

Print Friendly, PDF & Email