SHARE
செல்வநாதன் (NEWSREPORTER)

கடந்த 20 வருடங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 48 வயதுடைய நபர் ஒருவரை பிரித்தானிய போர்க்குற்ற விசாரணைக்குழு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் Northamptonshire என்னும் இடத்தில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டம் 2001 இன் பிரிவு 51 இன் கீழ் குற்றங்கள் புரிந்ததாக சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழ் மற்றும் சிங்கள சேவைகள் தமிழ் நாளிதழ் வீரகேசரி மற்றும் சிங்கள வார இதழ் ராவய ஆகிய ஊடகங்களில் பணியாற்றிய ஊடகவியலாளர் நிமலராஜன் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email