SHARE

இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித தொடர்பான தடை விதிப்பு அதிகார சபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் இராஜதந்திர நடவடிக்கை ஒன்றினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வாவை தடை செய்ய போதுமான ஆதாரங்களை யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் (ITJP) வெளியிட்டிருந்தது. அதனை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு சமர்ப்பித்திருந்தது. ஆனால் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் சித்திரவதைக்குள்ளாக்கட்டமை தொடர்பில் சவேந்திர சில்லாவவே முழுமையாக அறிந்திருக்கவேண்டும். அவரது வழிநடத்தலில் கீழ் உள்ள இராணுவமே பல்லாயிரம் அப்பாவி தமிழர்களை கொன்றதுடன் பின்னர் கடத்தல் சித்தரவதைகளையும் மேற்கொண்டது.

இந்நிலையில் தான் ITJP வெளியிட்டுள்ள ஆதராங்களை கொண்டு உலகளாவிய மனித தொடர்பான தடை விதிப்பு அதிகார சபையின் கீழ் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடைசெய்ய பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென புலம்பெயர் தமிழர்கள் இராஜதந்திர நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரித்தானியாவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இது தொடர்பிலான தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டுவருகின்றனர். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் நேரடியாக இந்த விடயத்தை கொண்டு சேர்க்கும் பட்சத்தில் அதனை பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதில் தமிழர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் இரண்டாம் தலைமுறையினர் என பலர் கலந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற பிரித்தானிய தொழிற்கட்சியினரின் இரவுநேர உணவு ஒன்று கூடலில் கலந்து கொண்ட செயற்பாட்டாளர்கள் அங்கு வருகை தந்திருந்த தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாக்கு எதிரான தடையை அரசிடம் வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh MP தலைமையில் பிரித்தானிய Morden நகரில் நடைபெற்ற மேற்படி தொழிற்கட்சியின் இரவுநேர உணவு ஒன்றுகூடலில் பிரதம விருந்தினர்களாக பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புக்கான நிழல் அமைச்சர் Wes Streeting MP, தொழிற்கட்சியின் பொதுச் செயலாளர் David Evans MP, Mitcham மற்றும் Morden கவுன்சிலின் தலைவர் ஆயசம யுடளைழn ஆகியோர் கலந்து கொண்டதுடன் தொழிற்;கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் (Tamil For Labour) தலைவர் திரு சென் கந்தையா தலைமையில் செயற்பாட்டாளர்களான விஜய் விவேகானந்தன், கபிலன் அன்புரெத்தினம், நிலக்ஜன் சிவலிங்கம், பிரசன்னா பாலசந்திரன், சிதம்பரசுப்ரமணியன் திருச்செந்திநாதன், சைலேசன் சித்தம்பரநாதன், விதுராவிவேகானந்தன், மயூரன் கிருபானந்த மநுநீதி, சசிகரன் செல்வசுந்தரம் மற்றும் அஜிபன் ராஜ் ஜெயந்திரன் ஆகியோரே கந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கையை விடுத்துள்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தாம் இராணுவத்தினரால் எவ்வாறு துன்புறுத்தப்பட்டோம் என்ற நேரடி சாட்சியங்களை கூறிய செயற்பாட்டாளர்கள் இராணுவத்தளபதிக்கு எதிரான தடையை பெற்றுத் தருவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்தக்குற்றங்களுக்கு நீதி கிடைக்க உறுதுணை வழங்குமாறும் கோரியுள்ளனர்.

இதேவேளை சவேந்திர சில்வாக்கு தடையை பெற்றுக்கொடுக்க சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளையோர் இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றையும் செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே பிரித்தானிய அரசிற்கு பெரும் அழுத்தமாக மாறிக்கொண்டிருக்கும் தமிழர்களின் மேற்படி நடவடிக்கையினால் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடைசெய்யுமானால் அது நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

Print Friendly, PDF & Email