SHARE

வடக்கு கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தமிழ்ப் பொலிசாரை இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்துவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழ்ப் பொலிசாரின் மனங்களில் தற்போதும் தமிழீழம் என்ற சிந்தனையே உள்ளதாக ஒருவர் கூறிய கருத்தினை தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்த கருத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் தமிழ்ப் பொலிசாரின் பின்புலத்தை கண்டறிவதற்காக இவ்வாறு விசாரணை இடம் பெறுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவ்வாறு தமிழ்ப் பொலிசாரிடம் விபரங்களைச் சேகரிக்கும் இராணுவப் புலனாய்வாளர்கள் தமது வீடுகள் மற்றும் அயலில் உள்ளவர்களிடமும் குற்றவாளிகள் போன்று விபரங்களை சேகரிப்பதாக பெரும் எண்ணிக்கையான தமிழ்ப் பொலிசார் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த விடயம் உடன் பொலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு சென்று தமக்கு தீர்வை முன்வைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இதனால் வடக்கு கிழக்கில் பணியாற்றும் 50ற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொலிசார் குழப்பமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

Print Friendly, PDF & Email