SHARE

ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளர் தீபச் செல்வனின் நடுகல் நாவலின் ஆங்கில மொழி பெயர்ப்பைபப் படிப்பதற்கு ஆவலாக உள்ளேன் என யஸ்மின் சூக்காக தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் (ITJP) இயக்குனரும் 2000-2004 ஆம் ஆண்டு வரையிலான நோர்வேயின் மத்தியஸ்த சமாதான நடவடிக்கையின் போது கொழும்பில் பி.பி.சி. நிருபராகவும் பணியாற்றிய பிரான்சிஸ் கரிசன் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவலின் சிங்கள் மொழி பெயர்ப்பு தற்போது தென்னிலங்கையில் சிங்கள மக்களிடையே பெரும் வரவேற்றை பெற்று வரும் நிலையில் ஆங்கில மொழி பேசும் வெளிநாட்டவர்களிடயேயும் எதிர்பார்பபை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே நடுகல் நாவலின் ஆங்கில மொழிபெயர்பை படிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன் என பிரான்சிஸ் கரிசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது கீச்சில் தெரிவித்துள்ளதாவது. நடுகள் நாவலின் சிங்கள மொழி பெயர்ப்பு அதை படிப்பவர்களிடத்தே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிந்துள்ளேன். 2009 ஆம் அண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போர், வன்னியில் தமிழர்களுக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்து கொள்வதால் இப் புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பை படிக்க ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தீபச்செல்வனின் நடுகல் நாவல் பிற மொழி பேசும் இனத்தவர்களிடயேயும் வரவேற்பை பெற்றுள்ளமை ஈழத்து படைப்பிலக்கியம் ஒன்றின் அதி உச்ச அடைவும் வெற்றியுமாகும்.

Print Friendly, PDF & Email