SHARE

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளராக நியமித்திருப்பது தவறானது என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக மன்றத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 ஆக இருந்து, 16 ஆக இருந்து தற்போது, 10 ஆக உள்ளது. இன்னும் மோசமான சூழ்நிலையை சந்திக்கும் நிலைப்பாடுகளை எட்டிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளாராக, நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர், நியமிக்கப்பட்டிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில், புளொட் மற்றும், ரெலோ தமது வகிபாகத்தை செலுத்தி வருகின்றார்கள். மக்களால் நிராகரிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரை, செயலாளராக நியமித்திருப்பதும், இந்த விடயம் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளையும் சார்ந்திருக்கின்றது. எதிர்காலத்தில் மக்களின் பிரச்சினைகளை கூட்டமைப்பு எவ்வாறு அணுகப் போகின்றது என்ற கேள்வியும் இங்கு உள்ளது என்றார்.

Print Friendly, PDF & Email