SHARE
image_pdfPRINT

நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஏழு பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதுடன் ஏனைய 267 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மினுவங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து 540ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12ஆயிரத்து 18ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து இதுவரை ஐயாயிரத்து 858 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் ஆறாயிரத்து 97 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.