SHARE

பதில் நீதிபதி திருமதி மனோன்மணி சதாசிவம் நமது ஈழநாட்டுக்கு அதிரடி பேட்டி !!

மதிப்பிற்குரிய திருமதி மனோன்மணி சதாசிவம் அவர்கள் கொழும்பு சட்டக்கல்லூரியில் முறைப்படி தனது சட்ட கற்கையை நிறைவு செய்துஇ 30 வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணியாக சேவையாற்றியவர். முல்லைத்தீவில் பணிபுரிந்த காலத்தில், இலவசமாக வழக்குகளை செய்து வந்தது மட்டுமன்றி, விடுதலைப்புலிகளில் நீதிநிர்வாக துறையின் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்.

தமிழீழ சட்டக்கல்லூரியில் பயிற்றுவித்தது மட்டுமன்றி பல இளம் சட்டத்தரணிகளை உருவாக்கியவர். பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான மற்றும் காணாமல் போன பல தமிழ் இளைஞர்களின் வழக்குகளை எடுத்து நடாத்தியவர். இவரது அனுபவம் மற்றும் திறமை காரணமாக, பதில் நீதிமதியாக பதவி உயர்வு பெற்றவர்.

இவர் அண்மையில் “சுமந்திரன் ஏன் உடனடியாக பதவி விலகவேண்டும்இ அல்லது விலக்கப்பட வேண்டும்“ என்ற தலைப்பில் Colombo Telegraph என்ற இணையத்தளத்தில் மிகவும் சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இதனுடைய தமிழ்வடிவம் உதயன் பத்திரிகை மற்றும் பல ஊடகங்களில் வெளியாகி இருந்தன. இந்த கட்டுரை, சுமந்திரன் ஏன் ஒரு நேர்மையான சட்டத்தரணியோ மக்கள் பிரதிநிதியோ அல்ல என்பதை ஆழமாகவும் ஆதாரபூர்வமாகவும் முன்வைத்திருந்தது.

இதனால் இந்த கட்டுரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தது. இது மட்டுமன்றி சுமந்திரன் பதவி விலக கோரி ஒரு இணைய வழியிலான கையெழுத்து போராட்டத்தையும் ஆரம்பித்திருந்தார்.

28/06/2020 அன்று தாயகம் தமிழ் வானொலியில் இடம்பெற்ற சிறப்பு நேர்காணலில், இந்த கருத்துகளுக்கான பதில் என்ன என தொகுப்பாளர்களான சி.சிறிக்குமார் மற்றும் பாலா விக்னேஸ்வரன் அவர்கள் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய சுமந்திரன், கேள்வியை திசை திருப்பும் முகமாக திருமதி மனோன்மணி சதாசிவத்தின் பின்னணி மற்றும் கட்டுரையின் நோக்கம் பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பதில் அளிக்காமல் தப்பித்துக்கொண்டார்.

அது மட்டுமன்றி, திருமதி மனோன்மணி சதாசிவம் பற்றி தனது ஆட்கள் விசாரணை மேற்கொண்டதையும், அவரின் தனிப்பட்ட மற்றும் குடும்ப விபரங்களை திரட்டியுள்ளதையும் பகிரங்கமாக தெரிவித்ததன் மூலம், அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் மறைமுக எச்சரிக்கை விட்டிருந்தார்.

இந்நிலையில், திருமதி மனோன்மணி சதாசிவம், இது தொடர்பாக, நமது ஈழநாட்டுக்கு வழங்கிய சிறப்பு பேட்டி பின்வருமாறு,

கேள்வி: வணக்கம் மதிப்பிற்குரிய நீதிபதி திருமதி மனோன்மணி சதாசிவம் அவர்களே.

பதில்: வணக்கம்.

கேள்வி: சுமந்திரன் தொடர்பான உங்களுடைய கருத்துக்கள் பற்றிஇ ‘தாயகம் தமிழ்’ ஒலிபரப்பு சேவையினர் அவரிடம் கேட்டபோது, மனோன்மணி சதாசிவம் என்ற ஒருவர் இருந்ததாக தனக்கு தெரியாது என்றும் வவுனியாவில் இருந்த சட்டத்தரணிகளும் இவரை அறிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். அத்துடன் தாங்கள் மேற்கொண்ட விசாரணைகள் அடிப்படையில்இ உங்களை பற்றி அறிந்துகொண்டுள்ளதாகவும், உங்களிடம் திறமைகள் இல்லை ஆயினும், நீங்கள் வயது முதிர்ச்சி காரணமாகவே பதில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது போலவும் குறிப்பிட்டு உங்கள் கருத்துக்களுக்கு பதில் தர மறுத்துள்ளார். இது தொடர்பாக உங்கள் பதில் என்ன?

பதில்: எனது கட்டுரையில் உள்ள விடயங்கள் வெறும் கருத்துக்கள் மட்டுமல்ல. ஆதாரபூர்வமான உண்மைகள். நிச்சயமாக சுமந்திரன் அவர்களால் அவற்றுக்கு பதில் சொல்ல முடியாது. எனவே அவர் பதில் சொல்ல மறுத்தது ஆச்சரியப்படும் விடயம் அல்ல. நான் யார் என்பதோஇ எனது நோக்கம் என்ன என்பதோ இங்கு முக்கியம் இல்லை. எனது தனிப்பட்ட பின்னணி மீது சேறு பூசுவதன் மூலம் தான்தப்பிக்க முயல்வது மிகவும் கீழ்த்தரமான ஒரு யுக்தி. இது கடைகெட்ட அரசியல்வாதிகளின் தரங்கெட்ட புத்தியின் வெளிப்ப்பாடு. அவரிடம் ஒரு துளி நேர்மையோ மனச்சாட்சியோ தொழில்சுத்தமோ இருந்திருந்தால் அவர் எப்போதோ தானாக பதவி விலகியிருக்க வேண்டும்.

ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் கூட சுமந்திரன் வடக்கில் இருக்கும் ஒரு மூத்த தமிழ் சட்டத்தரணியை அறிந்திருக்கவில்லை என்று சொல்வது அவருக்கே அசிங்கமானது. ஐந்து வயதில் இருந்து கொழும்பில் சிங்களவர்களில் காலடியிலேயே வளர்ந்ததாலும், அரசியலில் குதிக்கும்வரை எந்த விதமான மனித உரிமை வழக்குகளிலோ, தமிழ் அரசியல் கைதி விடயங்களிலோ ஈடுபடாததாலும் இவர் என்போன்றவர்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது உண்மைதான்.

இவ்வாறான மேல்தட்டு மனநிலை கொண்ட ஒருவர் வடக்கில் இருக்கும் அப்பாவி பொதுமக்களை ஒரு பொருட்டாக மதித்து அவர்களுக்கு சேவையாற்றுவாரா என்பது கேள்விக்கு அப்பால்பட்டது.

நானும் கொழும்பு சட்டக்கல்லூரியில் தான் படித்து பட்டம் பெற்றுஇ சட்டத்தரணியானேன். என்னாலும் மூன்று மொழிகளும் சரளமாக பேசவும் எழுதவும் முடியும். சுமந்திரனைப்போல நானும் பணத்தாசை பிடித்தவளாக இருந்திருந்தால் கொழும்பிலேயே
இருந்துஇ வர்த்தகதுறை சட்டத்தரணியாக பணியாற்றி சுக போகங்களுடன் வாழ்ந்திருக்க முடியும்.

ஆனால் எனது தமிழீழ மண்ணுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் நான் முல்லைத்தீவில் பணியாற்ற ஆரம்பித்தேன். அப்போதுதான் இலங்கை அரசால் எமது மக்கள் பட்ட துன்ப துயரங்களையும், விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தின் நியாயப்பாட்டையும் முழுமையாக உணரமுடிந்தது. அதுமட்டுமன்றி, புலிகளால் உருவாக்கப்பட்ட நிழல் அரசின் கீழ் எமது மக்கள் எவ்வளவு சுதந்திரமாகவும் நிம்பதியாகவும் வாழ்ந்தார்கள் என்பதையும் நேரில் வாழ்ந்து
உணர்ந்துகொண்டவள் நான்.

தமிழீழ சட்டக்கல்லூரியில் பயிற்றுவிக்கும் சந்தர்ப்பமும்இ தமிழீழ நீதிநிர்வாக துறையின் உருவாக்கத்தில் பங்களிக்கும் பெருவாய்ப்பும் எனக்கு கிட்டின. எனது இந்த அனுபவங்களையிட்டு நான் பெருமை கொள்கிறேன். இவற்றில் ஒரு துளிகூட இல்லாத சுமந்திரன் எனது திறமை பற்றி கேள்வி எழுப்புவது வேடிக்கையானது.

சமாதான உடன்படிக்கையின் பின் நான் வவுனியாவில் பணிபுரிய ஆரம்பித்தேன். சுமந்திரன் போல பெயருக்கும் புகழுக்கும் பணத்துக்கும் அலையாமல், அமைதியாக எத்தினையோ வழக்குகளை நான் கையாண்டுள்ளேன்.

பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்
இளைஞர்களின் வழக்குகளில் ஆஜராகியது மட்டுமல்லாமல்இ பல பொதுநல வழக்குகளிலும் பின்னணியில் வேலைசெய்துள்ளேன். அண்மையில் கூட, முன்னாள் போராளிகள் உட்பட காணாமல் ஆக்கப்பட்ட சிலருக்கான ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்து, அதற்கான வழக்குகளை தொடர்ந்து நாடத்திக்கொண்டிருக்கிறேன்.

30 வருடத்துக்கு மேற்பட்ட எனது அனுபவத்தில் அரைவாசிகூட சுமந்திரனுக்கு இருக்க வாய்ப்பில்லை. சட்டத்துறை மட்டுமன்றிஇ எவ்வளவோ உரிமைகள் செயற்பாடுகளிலும் நான் ஈடுபட்டுள்ளோன். குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் உறவினர் சங்கத்தின் போராட்டங்களில் எவ்வளவோ உதவிகளை செய்தது மட்டுமல்லாமல், அவர்கள் சார்பில் ஐ.நா.விற்கான முறைப்பாடுகளையும் சமர்ப்பித்துள்ளோன். எனினும் என்னுடைய சேவைகளை நான் இங்கே பட்டியலிட்டு காட்ட விரும்பவில்லை.

எனது மூப்பு காரணமாகவே என்னை பதில் நீதிபதியாக நியமித்துள்ளார்கள் என்பதும் நான் வழக்குகளை பிற்போடுவது போன்ற வேலைகளையே செய்கிறேன் என்றும் சுமந்திரன் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. எமது
மக்களை அடி முட்டாள்களாக கருதி அவர்களை எப்போதும் ஏமாற்றிவிடலாம் என நினைக்கும் அவரது எண்ணத்தின் வெளிப்பாடு தான் இது. வெறுமனே வயது அடிப்படையில் எவரும் நீதிபதியாக முடியாது என்பது சிறு குழந்தைக்கும் தெரிந்த விடயம்.
எனது திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலேயே நான் பதில்நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். இதை இலங்கை நீதிதுறையில் உள்ள அனைவரும் அறிவர்.

இவை ஒருபுறம் இருக்க, சுமந்திரன் என்னைப்பற்றி “தாங்கள்” விசாரணை செய்துள்ளதாகவும், எனது தனிப்பட்ட விபரங்களை திரட்டியுள்ளதாகவும் பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ள விடயம் மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக அவர் “நாங்கள்” என்று பன்மையிலேயே குறிப்பிட்டு இருப்பது அதிர்சிக்குரியது. இது அவர் ஒரு தனி நபராக செயற்படவில்லை என்பதையும்இ அரசின் கைக்கூலியாகவே செயற்படுகிறார் என்பதையும் இது தெளிவாக காட்டுகிறது. அவரின் பின்னணியில் அரச புலனாய்வு துறையினர் செயற்படுவதை அவர் தனது வாயாலேயே ஒத்துக்கொண்டுள்ளார்.

கேள்வி: அவர் வவுனியா பிரதேச மக்களை அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினரை குறிப்பிட்டு இருக்கலாம் அல்லவா?

பதில்: இல்லை, வவுனியா பிரதேசம் தமிழர் விடுதலைப் போரில் அளப்பெரும் பங்காற்றிய நிலம். இது இவரைப்போன்ற தமிழர் விரோத செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மண் அல்ல. ஒரு தனி நபர்கள் பற்றி அடி ஆட்களை அனுப்பி விசாரணை செய்வது, குடும்ப விபரங்களை திரட்டுவது என்பன சட்டவிரோதமானவை. இவற்றுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பும் உடந்தையாக இருந்திருக்க முடியாது. எந்தவொரு நேர்மையான சட்டத்தரணியோ அரசியல்வாதியோ இவ்வாறாக கீழ்த்தரமான வேலையில் ஈடுபடமாட்டார்கள். தனிப்பட்டவர்களால் இவ்வளவு இலகுவாகவும் இவ்வளவு விரைவாகவும் இப்படி தகவல் திரட்ட முடியாது. இதனால் இவர் அந்த நேர்காணலில் “நாங்கள்” என்று குறிப்பிடுவதன் மூலம்இ தான் அரச கைக்கூலி என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதுடன், இவரின் பின்னணியில் வேலை செய்வது அரச புலனாய்வு துறையினருமே என்பது தெளிவாகிறது.

கேள்வி: உங்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டதா? சுமந்திரனது நேர்காணலில் சொல்லப்பட்டவிடயத்தை எப்படிப்பார்க்கிறீர்கள்?

பதில்: ஆம். கடந்த காலங்களில் எனக்கு பல அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தபோது, அதனை வாபஸ் வாங்கும் படி பல தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. இவற்றை அவ்வப்போது மனித உரிமை செயலகத்திற்கும் தெரியப்படுத்தி இருந்தேன். எனினும் நான் இவற்றுக்கு பயந்து பின்வாங்கவோ, நாட்டைவிட்டு ஓடவோ இல்லை.

அண்மையில், எனது அயலவர்களிடம் சென்ற சில ஆயுதம்தரித்த நபர்கள், தங்களை இலங்கை புலனாய்வு துறையினர் என்று அறிமுகம் செய்து, என்னை பற்றி விசாரித்ததை அறிந்தேன். அப்போது எனக்கு அவர்கள் யார் என்பது தெரியவில்லை. ஆயினும்
சுமந்திரனின் இந்த நேர்காணலின் பின்னர் அவர்கள் சுமந்திரனால் அனுப்பப்பட்ட இலங்கை புலனாய்வு துறையினர் என்பது ஊர்ஜிதமாகின்றது. அந்த நேர்காணலில் சொல்லியுள்ள விடயம் எனக்கு விடப்பட்ட ஒரு மறைமுக எச்சரிக்கையாகவே நான் கருதுகிறேன்.

தனக்கு S.T.F பாதுகாப்பு பெறுவதற்காக, அப்பாவி முன்னாள் போராளிகள் மீது தன்னை கொல்ல முயன்றதாக, இலங்கை புலனாய்வுதுறையுடன் இணைந்து பொய் குற்றச்சாட்டை சோடித்தவர் சுமந்திரன். இவரால் 20 மேற்பட்ட தமிழ் இளைஞர் அரசில் கைதியாக சிறைகளில் சித்திரவதை அனுபவிக்க STF பாதுகாப்புடன் பவனிவருபவர் சுமந்திரன்.

புலம்பெயர் தமிழர்களை “புலம்பெயர் புலிகள்” என பட்டம் சூட்டி, நாடுதிரும்பும் பலர் கைதாகி சித்திரவதை அனுபவிக்க நேரடி காரணமானவர் சுமந்திரன். தன்னை எதிர்ப்பவர்களை புலனாய்வு துறையின் உதவியோடு என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்காதவர் இவர். எனினும் இவரின் மிரட்டலுக்கு நான் அடிபணியப்போவது இல்லை.

கேள்வி: நீங்கள் எழுதிய கட்டுரையில் அவர் மீது கூறிய இத்தகைய குற்றச் சாட்டுக்கள் பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோருவதற்காகவே முன்வைத்துள்ளீர்கள் என்று கூறுகின்றாரே?

பதில்: ஒருவேளை இலங்கை அரசை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினால் இவர் கூறுவது ஏற்புடையதாக இருக்கும். அதை விட்டுவிட்டு அவரை தமிழ் அரசு கட்சியில் இருந்து விலகும்படி கோரி கட்டுரை எழுதினால் அதற்கு அகதி
தஞ்சம் வழங்குவார்கள் என்றால் எப்படி? இவர் இலங்கை அரசின் கைக்கூலி என்பதையும், அவரை விமர்சிப்பது இலங்கை அரசை விமர்சிப்பதுக்கு சமம் என்பதை அவரே சொல்லவருகிறாரா? அவரால் இலங்கை புலனாய்வுத்துறையினை கொண்டு யாரையும் எதுவும் பண்ண முடியும் என்பதையும் அவரே ஒத்துக்கொள்கிறாரா?

கேள்வி: நீங்கள் தமிழ் ஈழம் என்று கட்டுரையில் குறிப்பிட்டதை அவர் குறிப்பிடுகின்றார்.

பதில்: ஈழம் என்பது இலங்கைத்தீவின் ஒரு பெயர். இங்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்கள். இதனையே நாம் தமிழ் ஈழம் என்று குறிப்பிடுகின்றோம். இதனை கொழும்பில் வளர்ந்தவர் அறிய வாய்ப்பில்லை. இருப்பினும் இரண்டு தடவைகள் வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதியாக இலங்கை பாராளுமன்றம் சென்றபின்னரும் அதனுடைய விளக்கம் தெரியாமல் இருப்பது என்பது வேடிக்கையாக உள்ளது. தமிழ் ஈழம் என்ற பெயரைப்பாவித்து விட்டால் அரசியல் தஞ்சம் கிடைக்கும் என்பது அடிமுட்டாள் தனம்.

கேள்வி: சுமந்திரன் ஏன் உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என நீங்கள் கூறுவதற்கான காரணம் என்ன?

பதில்: தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பார்கள். அவர் ஏன் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக நான் ஏற்கனவே ஊடகங்களில் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன். தமிழினத்தை சிங்களத்துக்கு காட்டி கொடுப்பவர்களின் பட்டியல் அல்பிரட் துரையப்பா தொடக்கம் லக்ஸ்மன் கதிர்காமர் வரை தொடர்ந்து இன்று சுமந்திரன் வரை நீண்டுள்ளது. இவர் கூட்டமைப்பிலிருந்து மட்டுமல்ல தமிழ் மக்களிடையே இருந்தும் களையெடுக்கப்பட வேண்டியவர்.

கேள்வி: திரு சுமந்தரன் தமிழர்களை காட்டிக்கொடுத்துள்ளார் என நீங்கள் குறிப்பிடுவதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா?

பதில்: இவர் தேசிய பட்டியலினூடாக பாராளுமன்றம் வந்தபின்னர் பல்வேறுபட்ட தமிழ் தேசிய நீக்க செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். நாம் இலங்கையர்கள் இலங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டோம் என்று ஒரு ஊடகத்திற்கு அவர் வெளிப்படையாகவே 2012 இல் பேட்டி வழங்கியிருந்தார்.
இவர் தமிழினத்தின் அரசியலை மட்டுமின்றி தமிழ்இளைஞர்களையும் அரசுக்கு காட்டிக்கொடுத்துள்ளார். இன்றும் 20க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் காலவரையின்றி இலங்கை சிறையில் வாடஇ சுமந்தரனே காரணமாகும்.

கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாறு என்பது எப்போதும் புலிகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது என நீங்கள் குறிப்பிட காரணம் என்ன?

பதில்: தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது 2001 ஆண்டு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி, இலங்கை தமிழ் காங்கிரஸ்இரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்பட்டதை தொடர்ந்து உருவாக்கபட்டது.

அப்போதைய TULF பொதுச்செயலாளர் திரு சம்பந்தன் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு (புலிகள்) முழு அரசியல் ஆதரவையும் அளிக்க வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் சக்திகளும் ஒரே பதாகையின் கீழ் ஒன்றுபடுவதற்கான நேரம் வந்து விட்டது என்று அறிவித்தார். அன்றைய அரசியல் சூழ்நிலையில் புலிகளே இக்கட்சிகளுக்கு பின் நின்று இவற்றை ஒன்றிணைத்து 5 டிசம்பர் 2001 நடந்த பாராளுமன்ற தேர்தலில் சந்திரிகா அரசை விழுத்தினர். இது ஊர் அறிந்த இரகசியமாகும்.

கேள்வி: ‘புலிகள் முஸ்லிம்களை பெருமளவில் வெளியேற்றியது இன அழிப்புக்கு சமம்’ என சுமந்தரிரன் குறிப்பிடுவதன் காரணம் என்ன?

பதில்: இது கீழ்தரமான அரசியல் தந்திரமாகும். 1990களில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து ஒன்றிணைய முஸ்லிம் தலைவர்களே தயாராகி விட்ட நிலையில் இவர் இவ்வாறு கூறுவது உண்மையில் சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் முஸ்லிம்களின் சார்பாக ரவுப்ஹக்கீம் கலந்து கொண்டதனூடாக இத்தகைய விசமப் பிரச்சாரங்களுக்கு அன்றே முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. முஸ்லிம்களை வெளியேற்றியது இனஅழிப்புக்கு சமம் என இவர் இப்பொழுது கூறி வருவதன் ஊடாக இவர் அடிப்படைவாத முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற விரும்புவதாககருதலாம்.

அதுமட்டுமின்றி பின்னணியில் இலங்கை அரசின் தமிழ் முஸ்லிம் மக்களை பிரித்தாழும் சூழ்ச்சியும் காணப்படலாம் என நினைக்கிறேன்.

கேள்வி: விடுதலைப் புலிகள் போர்க்குற்றங்களைச் செய்ததை ஒப்புக் கொள்ளத் தயாராக இருப்பதாக சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்: இலங்கை இனப்படுகொலை தொடர்பான சர்வதேச அறிக்கைகள் இலங்கை அரசபடைகளால் தமிழ் ஆண்களும் பெண்களும் மிகக்கொடூரமான பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டனர் என்பதை மட்டும்தான் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கையில் புலிகளால் பாலியல் சித்திரவதைகள் நடத்தபட்டதாக எங்குமே தெரிவிக்கபடவில்லை.

சுமந்திரன் இந்த அறிக்கையை நன்கு அறிந்திருப்பதாகக் கூறும் அதே வேளையில் தனது எந்த உரைகளிலும் இதை ஒருபோதும் மேற்கோள் காட்டவில்லை! அவர் தனது சொந்த தமிழ் சமூகத்திற்கு எதிரானவர் என்பதை இவரின் பேச்சே வெளிப்படுத்துகிறது.

தங்களது நேரத்தினை ஒதுக்கி எமது கேள்விகளுக்கு தயங்காது பதிலளித்தமைக்கு பதில் நீதிபதி திருமதி மனோன்மணி சதாசிவம் அவர்களுக்கு எமது நன்றிகள்

Print Friendly, PDF & Email