SHARE

முன்னாள் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க

வடகிழக்கிலும் தெற்கிலும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இராணுவ குழுவொன்று ஈடுபட்டிருந்தது. கடந்த ஆட்சி காலத்திலும் அவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே இவ்வாறு இதனை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் ஜனாதிபதியாக வந்தால் பெரியவர், சிறியவர் பாகுபாடின்றி விசாரணையை முன்னெடுப்பேன். அவர்களை தண்டிக்க நான் பிற்கப்போவதில்லை.

இதனிடையே தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக, தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த அவர் தனது கட்சியில் அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளும் இல்லாதமையினால் நாட்டை மேம்படுத்துவதற்கான சகல வாய்ப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.

ஜனாதிபதியாக ஆகவேண்டும் என்பது தனது கனவு அல்ல.மக்களுக்காகவே தான் தேர்தலில் போட்கின்றேன். அத்தோடு சிறந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறு அழைப்பு விடுத்த அவர், நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அடுத்த தலைமுறையினருக்கு பாரிய பொறுப்பு இருப்பதாகவும் கூறினார்.

இதனிடையே தாம் கட்சி சார்ந்து அரசியலை முன்னெடுக்கவில்லையென தெரிவித்த மகேஸ் சேனநாயக்க கட்சி அரசியல் இன்மையால் மக்களது பிரச்சினைகளை தீர்க்க தமக்கு முடியுமெனவும் தெரிவித்தார். 

Print Friendly, PDF & Email