SHARE
image_pdfPRINT

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் தாமே பிரதமராக பதவி வகிக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவானால் அவர் யாரை பிரதமராக நியமிப்பார் என்பது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

இது தொடர்பாக சஜித் பிரேமதாச இதுவரையில் உறுதியான பதில் எதனையும் வழங்கவில்லை.

இந்நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய ரணில், சஜித் ஜனாதிபதியானதும் தாமே தொடர்ந்து பிரதமர் பதவி வகிக்கவிருப்பதாக தெரிவித்தார்.