SHARE
image_pdfPRINT

யாழில் வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதடன் கோவில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கும்பல் தொடர்பில் யாழ் சுண்ணாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் இன்று காலை சுண்ணாகம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இருபது மற்றும் பத்தொன்பது வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோண்டாவில் மற்றும் தெல்லிப்பளை பகுதியைச்சேர்ந்த இவர்களிடமிருந்து 5மில்லி கிராம் கெரோயின் பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன்,அவர்களிடம் தீவிர விசாரணைகளையும் பொலிசார் மேற்கொண்ணடனர்

இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலிற்கமைவாக யாழ் கொக்குவிலிலுள்ள இந்து ஆலயம் ஒன்றின் கோபுரத்திற்குள் மறைத்து வைத்திருந்த ஒரு தொகுதி கூரிய ஆயதங்களையும் சுண்ணாகம் பொலிசார் மீட்டனர்.

ஆறு கைக் கோடரிகள் மற்றும் மூன்று பாரிய வாள்கள் அத்துடன் மர்ம நபரைப்போல அடையாளம் தெரியாத முறையிலான இரண்டு ஆடைகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.