SHARE
– சுமந்திரன் கேள்வி

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பேசுகையில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் பற்றியும் அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பிலான விசபாரணைகள் பற்றியுமே போசப்படுகிறதே தவிர, தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது பற்றி எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த 20 வருட காலப்பகுதியில் அதிக ஊடகவியலாளர்கள் யாழ் மாவட்டத்திலேயே கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு ஊடக நிறுவனம் மீது 33 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதே போல் 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொள்ளப்பட்டுள்ளனர். இவை தொடர்பில் எதுவித விசாரணைகளும் இடம்பெறாமை வெட்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்கஇ கீத் நொயார்இ பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் யாழில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் எவ்வித விசாரணைகளும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email