Home Blog Page 341

இலங்கை செல்லும் சிவ் சங்கர் மேனன் : புதிய பேரம்?

இலங்கைக்கான அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர் வரும் 29 ஆம் திகதி கொழும்புக்கு பயணம் செய்யவுள்ளார்.
கொழும்பில் மகிந்த ராஜபக்ச மற்றும் இதர அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சிவ்சங்கர் மேனன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது.
சிவ்சங்கர் மேனனின் கொழும்பு விஜயமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதொன்றல்ல என்றும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் முக்கிய பேச்சுகளை நடத்தவே அவர் அவசரமாக இலங்கை செல்கிறார் எனவும் அறியமுடிகின்றது.
வன்னி இன அழிப்பு நடந்துகொண்டிருந்த காலத்தில் பல தடவைகள் இலங்கை சென்று திட்டமிட்ட இன அழிப்பை நிகழ்த்துவது தொடர்பாக இந்திய அரசு சார்பி ஆலோசனை வழங்கியவர் சிவ் சங்கர் மேனன். வழமைபோல இலங்கையுடனான வியாபாரப் பேரமாகவே இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டை பிரிக்கும் ஏற்பாடுகள் எம்மிடம் இல்லை – இரா.சம்பந்தன்

தமது கட்சியின் யாப்பில் நாட்டை பிரிக்கும் வகையிலான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் உள்ள தமது கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது அதில் தவறுகள் இடம்பெற்றுள்ளதென இரா.சம்பந்தன் ´தி ஹிந்து´ பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, தமிழர் விடுதலை கூட்டணி, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளின் யாப்பில் நாட்டை பிரிப்பது தொடர்பில் ஏற்பாடுகள் உள்ளதால் அந்த கட்சிகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரி சிங்கள தேசிய முன்னணியின் செயலாளர் ஜயந்த லியனகே உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எனினும் மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டில் உரையாற்றிய சம்பந்தன், தமிழர் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க புதிய தருணம் பிறந்துள்ளதென கூறியதாக ´தி ஹிந்து´ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தமிழர்கள் உரிமைகளை பெற்றுக் கொடுக்க ஒருபோதும் செயற்படுவதில்லை எனவும் அதனால் ஐக்கிய இலங்கைக்குள் ஒருபோதும் தமிழர்கள் தங்களுடைய உரிமைகளை பெற முடியாது எனவும் சம்பந்தன் மட்டக்களப்பில் கூறியதாக ´தி ஹிந்து´ பத்திரிகை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி கண்டாவளையில் படையினரின் தாக்குதலில் 9பேர் காயம்!

கிளிநொச்சி கண்டாவளைப்பகுதியில் மண் ஏற்றச்சென்றவர்கள் மீது படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் காயம் அடைந்த 9பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார்கள்.

கடந்த செவ்வாய் கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கண்டாவளைப்பகுதியில் ஆற்று மண் ஏற்ற சென்றவர்களை மறித்த படையினர் மணல் ஏற்றுவதாக இருந்தால் பணம் கொடுத்து விட்டு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்கள் இதனை மறுத்தவர்கள் மீது படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள்.

இதனால் காயம் அடைந்த 9பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார்கள் நாள்தோறும் கண்டாவளைப்பகுதியில் சிறீலங்காப்படையினர் ஏதோஒருவகையில் மக்களுக்கு தொல்லைகொடுத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் இருந்து வந்த அமெரிக்க உயரதிகாரி சம்பந்தனுடன் தனியாகச் சந்திப்பு

ஜெனிவாவில் இருந்து சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்அதிகாரி அதுல் கெசாப், நேற்றுமுன்தினம் இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்க அதிகாரிகளில் ஒருவரான அதுல் கெசாப், அங்கிருந்து திடீரென நேற்று முன்தினம் சிறிலங்கா வந்தார்.

அவர் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசினார்.

உதவியாளர்கள் எவரும் இன்றி இருவரும் தனித்தனியே இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

அதன்பின்னர் அவர் சிறிலங்கா அரசதரப்பைச் சேர்ந்த அதிகாரிகள் பலருடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ மயமாக்கல் வன்முறைகளுக்கு வழிவகுக்கக் கூடும்

சிறிலங்காவின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் இராணுவ மயமாக்கலும், பொறுப்புக்கூறும் வகையிலான அரசாங்கம் இல்லாமையும், அந்தப் பிரதேசத்தில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக் கூடும் என்று அனைத்துலக நெருக்கடிகளை ஆராயும் குழு எச்சரித்துள்ளது.

இரு வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா நிலவரம் குறித்து வெளியிட்ட விரிவான அறிக்கையின் தொடர்ச்சியாக நேற்றைய இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த அறிக்கையில், சிறிலங்காவின் வடக்கில் மறுக்கப்படும் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து முதலாவது பகுதியிலும், வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் கீழ் நடக்கும் மீள்குடியேற்றம் குறித்து இரண்டாவது பகுதியிலும் கூறப்பட்டுள்ளது

கொடூரங்களைப் புரிந்தாலும் சிறிலங்காவுக்கு பிரித்தானியா ஆயுத உதவி – பலத்த சர்ச்சை

சிறிலங்கா ஆட்சியாளர்களின் கொடூரமான நடவடிக்கைகள் தொடர்பான சாட்சியங்கள் இருந்தபோதிலும், அந்த நாட்டுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆயுதங்களை விற்பனை செய்து வருவதற்கு, உள்துறை அமைச்சின் குழுநிலைக் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டது பற்றிய மேலதிகமான சடசியங்களை சனல் 4 ஆவணப்படம் வெளிப்படுத்தியுள்ள நிலையில், சிறிலங்காவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்காக அனுமதி தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது ஏன் என்று விளக்கமளிக்கமாறு பிரித்தானிய அரசிடம் ஆயுத விற்பனைக்கு எதிரான பரப்புரை அமைப்பு கோரியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 மே மாதம் முடிவுக்கு வந்த பின்னர் பிரித்தானியா, 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான இராணுவ மற்றும் இருபயன்பாட்டு கருவிகளை சிறிலங்காவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்சவுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் இந்திய அரசாங்கம்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இந்திய அரசாங்கம், “சிறந்த சர்வதேச இளைஞன்” என்ற விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.

இந்த விருதானது புதுடில்லியில் நடைபெறவுள்ள ஒரு பத்திரிக்கை விழாவில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(more)

இந்நிகழ்விற்காக டெல்லிக்கு வரும் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக அவருக்கு இசட் (Z ) பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியிருக்கிறது.

அதேவேளை, போர் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகம் முழுக்க தமிழர்கள் கண்ணீர் வடித்து வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் போர்க்குற்றவாளியான மகிந்தவின் மகனான நாமலுக்கு இந்திய அரசாங்கம் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தன: கோத்தபாய
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கடுமையான அழுத்தம் கொடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more)

பிரான்ஸ், பிரிட்டன் போன்ற பல மேற்குலக நாடுகள் மனிதாபிமான மீட்புப் பணிகளை இடைநிறுத்த முயற்சித்தன.  நாட்டின் தலைவர் மற்றும் படைகளின் சேனாதிபதி என்ற ரீதியிலும் இந்த அழுத்தங்களைக் கண்டு ஜனாதிபதி அஞ்சவில்லை.

இறுதிக் கட்ட போரின் போது மேற்குலக நாடுகள் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தன. புலிகளின் வான்படை பலம் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. அதனை முறியடிப்பதற்கு ஜனாதிபதி சிறந்த ஆலோசனைகளை வழங்கினார்.

ஒரே நோக்கத்தில் போரை முன்னெடுத்த காரணத்தினால் வெற்றியீட்ட முடிந்தது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான றிசாத், டக்ளஸ் ஆகியோர் மீண்டும் ஜெனிவா பயணம்

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் இருவர் நேற்று இரவு 7.55 மணியவில் பயணமாகியுள்ளனர்

கைத்தொழில்,வணிக அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சரும்,யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரே மீண்டும் ஜெனீவா நோக்கி பயணமாகியுள்ளனர்.(more)

இலங்கையிலிருந்து பயணமாகும் அமைச்சர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கட்டாரில் இரு தினங்கள் தங்கியிருக்கவுள்ளதுடன், இலங்கை ஜனாதிபதியின் விசேட செய்தியொன்றை கட்டார் அரசிடம் கையளிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

 

error: Content is protected !!