Home Blog Page 322

யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து விசாரணை ஆரம்பிக்க வேண்டும்

புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை!

பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வே
று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தமக்கிடையேயான முரண்பாடு

களை மறந்து, கொலைமிரட்டல் விடுத்த இலங்கை தூதரக இராணுவ அதிகாரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியா வாழ் தமிழர்களால் பிரித்தானிய இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ உடையிலிருந்த, தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும்   பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ   அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தோரை பார்த்து கழுத்தை வேட்டுவேன் என்ற சைகையினூடு கொலைமிரட்டல் விடுத்ததை சபேஸ்ராஜ் சத்தியமூர்த்தி என்ற முன்னாள் போராளி படம் பிடித்து வெளியிட்டது தொடர்ந்து, அவர்மீது சட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தனர்.
இந்த சட்ட நடவடிக்கைகளை வழிநடத்தும் சிரேஸ்ட சட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலருமான அருண்கணநாதன் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தரணி கீத் குலசேகரம் ஆகியோர் முதல்கட்டமாக, பொலீஸ் நிலையங்களில் செய்யப்பட்ட 50க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் அடிப்படையில், Westminister  Magistrate Court இல் கிரிமினல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து, பிடியாணைக்கு விண்ணப்பித்திருந்தனர். இதன் விளைவாக, பிரிகேடியர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
ஆனால், ஜனாதிபதி மைத்திரியால் அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை அருண்கணநாதன் மற்றும் கீத் குலசேகரம் முடுக்கி விட்டிருந்தனர். அதன் பிரகாரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உட்பட, பல்வேறு அமைப்புக்களை ஒருங்கிணைந்து, பிரித்தானிய பிரதமர், உள்நாட்டு அமைச்சர் மற்றும் பொதுநலவாய அமைச்சு ஆகியோருக்கு விண்ணப்பம் ஒன்றை நேற்று சமர்ப்பித்து இருந்தனர்.
அந்த இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்டிருக்கும் இராஜதந்திர பாதுகாப்பு விலக்கப்பட வேண்டும் என்றும், போர்க்குற்றம் மற்றும் கிரிமினல் குற்றங்கள் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட மீளாய்வு (JR) வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் கீத் குலசேகரம் தெரிவித்துள்ளார்.
British Tamil Conservatives (BTC) British Tamils Forum (BTF) Global Tamil Forum (GTF) International Centre for the Prevention and Prosecution of Genocide (ICPPG) Tamils Coordinating Committee (UK) Tamils for Labour Tamil Friends of the Liberal Democrats Transnational Government of Tamil Eelam (TGTE) Tamil Solidarity (TS) Tamil Youth Organization (TYO) Tamil National Alliance UK (TNA UK) Tamil Information Centre (TIC) World Tamils Historical Society (WTHS) போன்ற 13 அமைப்புக்கள் கையெழுத்து இட்டிருந்தன. இதன் முழு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் அந்த இராணுவ அதிகாரியை பொலிஸார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் பிரித்தானியாவில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று, தமிழர் ஒருங்கிணைப்பு குழு தலைமையில் இடம்பெற்றது. இந்த மாபெரும் எதிரப்புப் பேரணியில் முதல் முறையாய் பல்வேறு அமைப்புகள் ஒருமித்த குரலாய் ஒன்றுதிரண்டர். ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள், தமிழரின் ஒருமித்த பலத்தை நிரூபித்தனர்.
இந்த ஒன்றுபட்ட செயற்பாடானது, புலம்பெயர் அமைப்புக்கள் மீது இருந்த நம்பிக்கையீனத்தை போக்கி, தமிழர் பலத்தை மீண்டும் ஒருங்கிணைந்து பெரும் நம்பிக்கையை ஏற்படுதியுள்ளது. இந்த பெரும் ஒன்றிணைவுக்காக கடுமையாக பாடுபட்டு, பிரித்தானிய புலம்பெயர் அமைப்புக்களை முதல் தடவையாக வெற்றிகரமாக ஒருங்கிணைத்த பெருமை சிரேஸ்ட சட்டத்தரணி அருண்கணநாதன் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தரணி கீத் குலசேகரம் ஆகியோரையே சாரும்.

 Request by Diaspora Organisations Final 4 (3) (1)

கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் ஒன்றாக போர்க்கொடி

 

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.


நீண்டகால இடைவெளியின் பின் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இலங்கை தூதரகத்தின் முன்னிருந்து பொதுநலவாய அலுவலகம் வரை மாபெரும் பேரணியாக கலந்து கொண்டனர்.

இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியா வாழ் தமிழரகளால் பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ உடையிலிருந்த தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தோரை பார்த்து கழுத்தை வேட்டுவேன் என்ற சைகையினூடு கொலைமிரட்டல் விடுத்திருந்தார்.

குறித்த காணொளி ஊடகங்கள் மற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதினையடுத்து உலகத்தமிழரிடையேயும் சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறித்த அதிகாரியை பணிநிறுத்தம் செய்தது. எனினும் இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அவரது பணிநீக்கம் இரத்து செய்யப்பட்டு தொடர்ந்தும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த அதிகாரியை பொலிஸார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற ஒருமித்த கோரிக்கையுடன் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்துதரகத்தின் முன் ஒன்று திரண்ட பல்வேறு தழிழர் அமைப்புக்கள் கெமன்வெல்த் அலுவலகம் வரையான மாபெரும் நடைபவணி பேரணியில் ஈடுபட்டனர்.
தமிழீழ தேசியத்தலைவரின் திருவுருவப்படத்தினை தாங்கியபடி பெரும்திரளானோர் அணிவகுக்க இராணுவ அதிகாரிக்கு எதிரான கோசங்களுடன் பேரணி நடைபெற்றது.

கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் ஒன்றாக போர்க்கொடி

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

நீண்டகால இடைவெளியின் பின் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இலங்கை தூதரகத்தின் முன்னிருந்து பொதுநலவாய அலுவலகம் வரை மாபெரும் பேரணியாக கலந்து கொண்டனர்.

இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியா வாழ் தமிழரகளால் பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ உடையிலிருந்த தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தோரை பார்த்து கழுத்தை வேட்டுவேன் என்ற சைகையினூடு கொலைமிரட்டல் விடுத்திருந்தார்.

குறித்த காணொளி ஊடகங்கள் மற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதினையடுத்து உலகத்தமிழரிடையேயும் சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறித்த அதிகாரியை பணிநிறுத்தம் செய்தது. எனினும் இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அவரது பணிநீக்கம் இரத்து செய்யப்பட்டு தொடர்ந்தும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த அதிகாரியை பொலிஸார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற ஒருமித்த கோரிக்கையுடன் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்துதரகத்தின் முன் ஒன்று திரண்ட பல்வேறு தழிழர் அமைப்புக்கள் கெமன்வெல்த் அலுவலகம் வரையான மாபெரும் நடைபவணி பேரணியில் ஈடுபட்டனர்.
தமிழீழ தேசியத்தலைவரின் திருவுருவப்படத்தினை தாங்கியபடி பெரும்திரளானோர் அணிவகுக்க இராணுவ அதிகாரிக்கு எதிரான கோசங்களுடன் பேரணி நடைபெற்றது.

இலங்கைத்தூதரகத்தின் முன் மீண்டும் போராட்டம்

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.

இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் அவரை பொலிஸார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற ஒருமித்த கோரிக்கையுடன் சற்று முன்னர் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்துதரகத்தின் முன் ஒன்று திரண்ட பல்வேறு தழிழர் அமைப்புக்கள் கெமன்வெல்த் அலுவலகம் வரையான மாபெரும் நடைபவணி பேரணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

உலகெங்கும் வாழும் தமிழர்தரப்பில் அவருக்கு எதிராக எழுந்த எதிரப்பலைகளின் ஒட்டுமொத்த வடிவாமாக இந்த எதிரப்பாட்டம் அமைந்திருக்கின்றதை அவதானிக்க முடிகின்றது.

மாவீரர் கப்டன் குலமின் திருவுருவப்படம் வரலாற்று மையத்தில் கையளிப்பு

மாவீரர் கப்டன் குலம் என்பவரின் திருவுருவப்படம் ஈழத்திற்கான தொடர் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் அவரது சகோதரர் நரேஷ் குமார் பொன்னுத்துரியினால் பிரித்தானிய உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

25.5.1970 ஆம் ஆண்டு பிறந்த கப்டன் குலம் என அழைக்கப்படும் ரவி பொன்னுத்துரை மன்னார் முள்ளிக்குளம் சமரில் வீரசாவினைத் தழுவிக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தவேண்டுமென கோரிக்கை

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Wes Streeting டம் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இல்பேர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவரை சந்தித்த நாடுகடந்த அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் செயற்பாட்டாளர்களான சிவகுரு சயூபன் சிறிபாஸ்கரன் திவாகர் ஜெகானந்தன் ஆகியோரே குறித்த கோரிக்கையை முன்வைத்தனர்.

நவீனரக ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களுக்கொதிரான இன அழிப்பை செய்த இலங்கை அரசு தொடர்ந்தும் ஆயுதக்கொள்வனவில் ஈடுபட்டு வருவதோடு தமிழர்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்தவண்ணமே உள்ளது.

அந்தவகையில் பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதால் அது தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இரும்புக்கரம் மேலும் ஓங்கவே வழி வகுக்கும்.

எனவே இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேற்படி குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த சந்திப்பில் கோரிக்கையாளர்களின் விடயங்களை நன்கு கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமிழருக்கு எதிரான இலங்கை அரசின் அடக்கு முறை குறித்து விசனம் தெரிவித்ததுடன் ஆயுத விற்பனை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தான் கலந்துரையாடுவதாஅகவும் உறுதியளித்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசால், விளையாட்டுவிழாவில் மாவீரர் கௌரவிப்பு

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் நினைவாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவில் பாரிய விளையாட்டு நிகழ்வு ஒன்றை கடந்த 30ம் ஐPலை 2017 அன்று வெற்றிகரமாக நடாத்தியிருந்தது. இந் நிகழ்வில் பெருமளவான விளையாட்டு வீரர்கள் பொது மக்களும் பங்குபற்றினர். புலம்பெயர் நாடுகளில் பல தமிழ் அமைப்புக்கள் இப்படியான நிகழ்வுகளை நடாத்திவருகின்ற போதிலும், இந்த விளையாட்டு நிகழ்வானது மிகவும் தனித்துவமான அம்சங்களை கொண்டிருந்தது மட்டுமன்றி, மக்களின் பலத்த வரவேற்பையும் பெற்றிருந்தது.

இந்த நிகழ்வானது, தியாக தீபம் லெப். கேணல் திலீபன் என்ற மாவீரனின் நினைவாக நடாத்தப்பட்டது மட்டுமன்றி, தேசிய கொடியேற்றல், மாவீர வணக்கம், மற்றும் மாவீரர் படம் தாங்கிய அணிவகுப்பு என முழுமையான தேசிய விடுதலை உணர்வுடன் நடாத்தப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக, வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மாவீரர்கள் நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டதுடன், அவற்றை வழங்குவதற்காக, அந்தந்த மாவீரர்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் குடும்ப உறுப்பினர் மற்றும் உறவினர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்த சிறப்பு அம்சமானது எமது தமிழீழ விடுதலைப்போராட்ட உணர்வை ஊக்குவிப்பதாக அமைந்தது.

இந்த அடிப்படையில், நாட்டுப்பற்றாளர் திரு. கதிரவேலு பாலசிங்கம் அவர்களின் நினைவாக, அவரது மகனான திரு. பாலசிங்கம் குமரேசன் அவர்கள் அழைக்கப்பட்டு, கௌரவிக்கப்ட்டார். அவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியும் நாடுகடந்த தமிழீழ அரசின் முன்னணி செயல்பாட்டாளரும் ஆவார். அவர் தனது தந்தையின் நினைவுக் கோப்பையை விளையாட்டு வீரருக்கு வழங்கி வைத்தார்.

திரு கதிரவேலு பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து நீண்ட காலமாக செயல்பட்டு வந்தவர். இராணுவ ஆக்கிரமிப்பு காலப்பகுதியிலும் மிகுந் சிரமத்தின் மத்தியில் விடுதலைக்காக உழைத்தவர். இறுதிப் போர் நடைபெற்ற காலத்திலும் அயராது பின்தளப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இராணுவ தாக்குதலில் கொல்லபட்டார். ஆதனால் இவர் தேசியத் தலைவர் அவர்களால் ‘நாட்டுப்பற்றாளர்’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

செஐயசிக்குறு சமர் களத்தில் களமாடி வீரச்சாவடைந்த மேஐர் வஞ்சி அவர்களது நினைவாக, அவரது சகோதரனும் முன்னாள் போராளியுமான, திரு நித்தியானந்தராசா கந்தப்பு அழைக்கபட்டு கௌரவிக்கப்பட்டார். nஐயசிக்குறு சமரின் போது கரப்புக்குத்தி விஞ்ஞானக்குளம் பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் மேற் கொண்ட வலிந்த தாக்குதலில் மேஐர் வஞ்சி முன்னின்று தாக்குதலை நடாத்தி வீரச்சாவடைந்தார்.

பாலமோட்டை பகுதியில் இராணுவத்தினருடன் நடைபெற்ற நேரடி மோதலில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் கதிரவன் அவர்களது நினைவாக, அவரது சகோதரனான திரு அசாந்தன் தியாகராஐh அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். இவரும் முன்னாள் போராளி மட்டுமன்றி தொடர்ந்தும் நாடுகடந்த அரசுடன் இணைந்து தொடர்ந்தும் தமிழீழ விடுதலைக்கு போராடிவரும் ஒருவர். லெப்டினன்ட் கதிரவன் பாலமோட்டை பகுதியை நோக்கி முன்னேறிய இராணுவத்தினருடனான நேரடி சமரின்; போது 04 ஆகஸ்ட் 2007 அன்று வீரச்சாவை தழுவிக் கொண்டார். அவர் நினைவாக வெற்றிக்கேடயத்தை திரு அசாந்தன் தியாகராஐh வழங்கினார்.

அரசியல்துறை தாக்குதல் படையணியின் சிறப்பு தளபதியான லெப்டினன் கேணல் ஈழப்பிரியன் அவர்களின் நினைவாக அவரது உறவினரான, திரு திவாகர் சிறீபாஸ்கரன் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். லெப்டினன் கேணல் ஈழப்பிரியன் தலை சிறந்த தாக்குதல் தளபதிகளில் ஒருவர். அவர் தளபதியாக இருந்த காலப்பகுதியில் பல்வேறு தாக்குதல்களை வெற்றிகரமாக முன்னின்று நடாத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேஐர் மிகுதன் நினைவு வெற்றிக் கேடயத்தை அவரது உறவினரான திரு. யூட் தேவதர்சன் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேஐர் மிகுதன் அரசியல்துறை பொறுப்பாளர் திரு சு.ப.தமிழ்செல்வனின் மெய்பாதுகாவலர் அணியில் இருந்தவர் 02 நவம்பர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற விமான தாக்குதலில் வீரச்சாவடைந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்பு காலப்பகுதியில் மண்டைதீவு பகுதியில் நடைபெற்ற தாக்குதலின் போது வீரச்சாவடைந்த லெப்டினன்ட் கேணல் இன்பம் அவர்களின் நினைவான வெற்றி கோப்பையை அவரின் பெறாமகன் திரு கஐந்தன் nஐகதீசனால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. லெப்டினன்ட் கேணல் இன்பம் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மெய் பாதுகாவலராக கடமையாற்றியவராவார்.

nஐயசிக்குறு சமர் களத்தில் களமாடி வீரச்சாவடைந்த கப்டன் பழனியப்பன் அவர்களது நினைவு கேடயத்தை அவரது மைத்துனன் திரு குமரன் சிவதாஸ் வழங்கி கௌரவித்தார். வன்னி பகுதியை கைப்பற்றும் நோக்குடன் சிறீலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட nஐயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான தாக்குதலின் போது கப்டன் பழனியப்பன் 30 ஜனவறி 1997 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்தார்.

nஐயசிக்குறு படை நடவடிக்கையின் போது தாண்டிக்குளம் பகுதியை ஊடறுத்து விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலின் போது 26 மார்ச் 1997 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த கப்டன் பரணிதா நினைவாக வெற்றிக் கேடயத்தை அவரது சகோதரனான திரு மதுசன் இராசலிங்கம் வழங்கி கௌரவித்தார். இவரும் நாடுகடந்த அரசின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராக தமிழீழ விடுதலைப்பு போராடிவரும் ஒருவர். கப்டன் பரணிதா 2ஆம் லெப்டினன்ட் மாலதி படையணியின் இளநிலை படைத் தளபதிகளில் ஒருவராவார்.

பலாலி விமான தளம் மீதான விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைக்கு வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு 25 மே 2000 ஆம் ஆண்டு தாக்குதல் நடவடிக்கைக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வீரச்சாவடைந்த மேஐர் ஈழமணி நினைவாக வெற்றிக் கேடயத்தை அவரது உறவினரான திரு நவரட்ணராஐh ரட்ணராஐh வழங்கி கௌரவித்தார்.

nஐயசிக்குறு சமர் களத்தில் களமாடி வீரச்சாவடைந்த கப்டன் புயல்வாணன் அவர்களது நினைவு கேடயத்தை அவரது மைத்துனன் திரு யேந்திரன் மகேந்திரன் வழங்கி கௌரவித்தார். வன்னி பகுதியை கைப்பற்றும் நோக்குடன் சிறீலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட nஐயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான தாக்குதலின் போது மாங்குளம் பகுதியில் கப்டன் பழனியப்பன் 10 நவம்பர் 1998 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்தார்.
இது நிகழ்வு ஒரு விளையாட்டு விழாவாக மட்டும் நின்றுவிடாமல், எமது இன விடுதலைக்காக தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் உறவுகளை கௌரவித்து, அதன்மூலம் பிளவுபட்டுக்கிடக்கும் புலம்பெயர் தமிழ்மக்களை ஒன்றிணைத்து, எம் மாவீர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடு;த்தும் செல்லும் முயற்சியாகவும் இருந்தமை மிகவும் சிறப்பானதாக அமைந்தது. இதை ஏனைய புலம்பெயர் அமைப்புக்களும் தொடர வேண்டும் என்பதே தழிம் மக்களின் பேரவாவாகும்.

-சந்திரிகா-

பிரேசிலுக்கான இலங்கை தூதுவர் ஜெனரல். ஜெகத் ஜெயசூர்யா மீது யுத்தகுற்ற வழக்கு தாக்கல். – தூதுவர் தப்பியோட்டம் –

பிரேசில் நாட்டுக்கான இலங்கை தூதுவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெகத் ஜெயசூர்யா மீது மனித உரிமை அமைப்பு ஒன்றிணைந்து  பிரேசில் நாட்டில் யுத்தகுற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்ட காரணத்தினால் அவர் அந்த நாட்டில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தின் போது 2007-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், வன்னி பிரதேசத்தில் இராணுவ படைகளுக்கு தலைமை வகித்தவர் தளபதி ஜெகத் ஜெயசூரியா. இவர் இறுதி யுத்தத்தின் போது ஒரு இலட்சத்துக்கு  மேற்பட்ட தமிழ் மக்களின் இனப்படுகொலையை நேரடியாக வழிநடத்தியிருந்தார்.

இதன் காரணமாக இலங்கை அரசு இவருக்கு பதவி உயர்வு வழங்கி, பிரேசில் நாட்டிற்கான தூதுவராக நியமித்திருந்ததுடன், கொலம்பியா, பெரு, ஆர்ஜென்டீனா, சிலி, உட்பட ஐந்து நாடுகளில் அவருக்கான இராஜ தந்திர பாதுகாப்பும் (Diplomatic Immunity) வழங்கப்பட்டிருந்தது.

இவர் படைகளுக்கு தலைமை தாங்கிய காலப்பகுதியில் சித்திரவதைக்கு உள்ளான 14 பேர் வழங்கிய சாட்சிகள் அடிப்படையில், International Truth and Justice Project (ITJP) என்ற அமைப்பு, தென் அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றின் ஊடாக, பிரேசில் நாட்டில் இந்த வழக்கை கடந்த வாரம் தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கு தாக்கல் செய்ததனை அறிந்த,  பிரேசில் நாட்டுக்கான தூதுவர் ஜெகத் ஜேயசூரியா உடனடியாக அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

இராணுவ தளபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விடயத்தினை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கா குறித்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகள் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் மாலை லண்டனில் உள்ள கார்டன் நீதிமன்ற அறையில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தியிருந்தனர். அதிலேயே மேற்குறித்த விடயத்தை அறிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் ஆஜரான, சட்டத்தரணி  சார்ள்ஸ் கஸ்ரெசன் பெர்னாண்டஸ்   கருத்து தெரிவிக்கிக்கையில் “இது ஒரு மறக்கப்பட்ட இனப்படுகொலை” எனவும் “இந்த வழக்கு ஒரு ஆரம்பம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.

ஐ.நா முன்னாள் நிபுணரும், Hunan Rights Foundation – South Africaவின் இயக்குனருமான ஜஸ்மின் சூகா கருத்து தெரிவிக்கையில்  இது இலங்கை அரசுக்கு எதிரான சட்ட நடவடிக்கையில் ஒரு மிக முக்கியமான படி என்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நம்பிக்கை வழங்கும். ஜெகத் ஜெயசூர்யா தலைமறைவாகியதன் மூலம் தான் ஒரு குற்றவாளி என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் குற்றவாளி இல்லையெனில் துணிந்து நின்று வழக்கை எதிர்கொண்டிருப்பார் அத்துடன் இது போன்ற வழக்குகள் சிலி, பெரு மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளிலும் தொடரும் என தெரிவித்தார்

மனித உரிமை சட்டத்தரணியாகிய கீத் குலசேகரம் கருத்து தெரிவிக்கையில் இது போல முன்னர் இராணுவத் தளபதி சுசன மென்டிஸ் சுவிஸ் வந்த போது எடுத்த முயற்சியை பிரித்தானிய தமிழர் போரவை (BTF) தலையிட்டு முறியடித்திருந்து. இதனால் இம்முறை நாம் மிகவும் இரகசியமாகவே செயற்பட வேண்டி ஏற்பட்டது. எனினும் எப்படியோ தகவல் அறிந்த அவர் தப்பித்து விட்டார். ஆனாலும் இந்த வழக்கு தொடரப்பட்டு அவர் மீது பிடியாணை பிறப்பிப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கோள்வோம் என மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சனல் 4 ஊடகம் தயாரித்த போர்குற்றத்துடன் தொடர்புடைய ஜெகத் ஜெயசூர்யா பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது

 

லண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பிரித்தானியாவின் Stanmore பகுதியில் குடியிருக்கும் தமிழ் குடும்பம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Stanmore பகுதியில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தன்று குறித்த குடியிருப்பின் கதவை தட்டிய மர்ம நபர்கள் இருவர், அந்த குடியிருப்பின் கதவை திறந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி திறந்த வீட்டினுள் வலுக்கட்டாயமாக புகுந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் வாசல் பக்கம் என்ன களேபரம் என பார்க்கச் சென்ற பாதிக்கப்பட்டவரின் தாயார், நடப்பவற்றைக் கண்டு பயத்தில் அலறியுள்ளார்.

இதனையடுத்து அந்த கும்பல் இவரையும் தாக்கியுள்ளது. தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது.

மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பமானது தமிழர்கள் என தெரிய வந்துள்ளது. இதனிடையே காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவமானது கடந்த யூன் மாதம் 15 ஆம் திகதி நடந்துள்ளது. அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய இருவரும் கறுப்பினத்தவர்கள் எனவும் இளைஞர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

குறித்த தாக்குதலானது மிகவும் மோசமான திட்டமிட்ட தாக்குதல் சம்பவம் என, வழக்கை விசாரிக்கும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக Harrow பகுதி பொலிசாரை தொடர்புகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் 23 வயது நபர் ஒருவரை கைது செய்து விசாரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.

இலங்கையில் நிறுத்தப்படாது தொடரும் சித்திரவதையும் பாலியல் வன்முறையும் – வெளியாகும் புதிய ஆதாரங்கள்!

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் இலங்கையில் தற்போதும் சித்திர வதையும் பாலியல் வன்முறையும் தொடர்கிறது என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதிப்படுத்தி புதிய அறிக்கை ஒன்றை International Truth and Justice (ITJP) என்ற மனித உரிமைகள் நிறுவனம் வெளியிடவுள்ளது.

UNSTOPPED: Torture by the Sri Lankan Security Forces in 2016/17 என்ற பெயரில் வெளியாக உள்ள இந்த அறிக்கை, 2016 மற்றும் 2017 காலப்பகுதில் இடம்பெற்ற சித்திரவதைகள் பற்றிய ஆதாரங்களின் அடிப்படையில் அமையவுள்ளது.

முன்னாள் ஐநா நிபுணர்களில் ஒருவரான ஜஸ்மின் சூகா (Yamin Sooka) தலைமையில் இயங்கிவரும் International Truth and Justice (ITJP) என்ற நிறுவனம் முன்னாள் ஊடகவியலாளரான பிரான்சிஸ் கரிசன் (Frances Harrison) மற்றும் சட்டத்தரணிகளான அருண் கணநாதன் (Arun Gananathan) மற்றும் கீத் குலசேகரம் (Geeth Kulasegaram) ஆகியோரின் பங்களிப்புடன் இந்த வெளியீட்டு நிகழ்வு 14.07.2017 அன்று மாலை 4 மணிக்கு Garden Court Chambers என்ற பிரபல அலுவலகத்தில் இடம்பெற உள்ளது. இதற்கான அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டு நிகழ்வின் ஏற்பாட்டாளரகளில் ஒருவரும், பிரபல சிரேஷ்ட சட்டத்தரணியுமான திரு அருண் கணநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில இலங்கை பாதுகாப்பு படையினர் தமிழர்களை கடத்துவதும் சித்திரவதை செய்வதும் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. புதிய அரசு பதவிக்கு வந்து 30 மாதங்கள் கடந்தும் குறித்த வலையமைப்புக்களை கலைக்க தவறி விட்டன. மிகப்பெரிய இராணுவ முகாம்களில் உள்ள சித்திரவதை கூடங்கள்;, மனித கடத்தல்கள் அச்சுறுத்தி இலஞ்சப் பணம் பறித்தல் போன்ற விடயங்கள் இந்த குற்ற செயல்களில் அடங்கியுள்ளன. இவ்வகையான குற்றங்களுக்கு புதிய அரசு அரசால் ஒருபோதும் பொறுப்புக்கூறாது. எனவே இந்த விடயங்களை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தி இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம் என தெரிவித்தார்.

இந்த அறிக்கையின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தவரும், மனித உரிமை; சட்டத்தரணியுமான திரு. கீத் குலசேகரம் கருத்து தெரிவிக்கும் போது 2016, 2017 காலப்பகுதில் சித்திரவதை இடம்பெற்று வருவதை பிரித்தானிய நீதிமன்றங்களே ஏற்றுக்கொண்டு வருகின்றன. ஆயினும் பிரித்தானியா தழிழர் பேரவை (BTF) மற்றும் உலகத் தமிழர் பேரவை (GTF) ஆகிய அமைப்புக்கள் புதிய அரசின் கைக்கூலிகளாக மாறியிருப்பது மட்டுன்றிரூபவ் இலங்கையில் தற்போது கடத்தல்களோ சித்திரவதைகளோ நடைபெறுவதில்லை என்றும், அரசியல் தஞ்சம் பெறும் நோக்குடன் தமிழ் இளைஞர்கள் தமக்கு தாமே காயங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்று ஐ.நா மற்றும் சர்வதேச விசாரணையாளர்களை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு தெரிவிப்பதன் மூலமும், முக்கிய சாட்சியங்கள் மீது அவதூறுகளை பரப்பிவருவதன் மூலமும் இலங்கை அரசை காப்பாற்றி வருவற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தமக்கு மிகவும் அதிர்ச்சியை தருகின்றது எனவும் தெரிவித்தார். மாற்று இனத்தவரான ஜஸ்மின் சூக்கா,பிரான்சிஸ் கரிசன் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இருக்கும் கரிசனை கூட, எம் இனத்தின் விடுதலைக்கு போராடுவதாய் கூறும் இது போன்ற அமைப்புகளுக்கு இல்லாமல் போயிருப்பது தமக்கு மிகவும் வேதனையளிப்பதாகவும், இப்படியான பெரும் துரோகத்தை இழைத்து வரும் இப்படியான அமைப்புகளை மக்கள் இனங்கண்டு புறந்தள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கடமைகளுக்காக தன்னைக் கருவியாக்கியவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள்

சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த தமிழ் அரசியல்வாதியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் 28.05 2017 அன்று தனது 83 ஆவது வயதில் இயற்கை எய்தினார். மிக நீண்டதும் சவால்கள் மிக்கதுமான அவரது அரசியல் பயணம் எப்போதுமே தமிழர்களின் நலன் சார்ந்ததாகவே இருந்ததுடன் தமிழ் தேசியத்தின்பால் அவர் கொண்டிருந்த அளவற்ற பற்றையும் வெளிக்காட்டியிருந்தது. சுமார் ஆறு தசாப்த காலமாக இலங்கை தமிழ் அரசியலில் மிகவும் காத்திரமான பங்கினை வழங்கிய அவரது அரசியல் பாதையின் சில முக்கிய தருணங்களை அவரது நினைவு நாளில் நினைவு கூறுவது சாலச் சிறந்ததாகும்.

அரசியல் பிரவேசம்

1950 களில் தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த அவர் தனது அரசியலுக்கான தளமாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸையே தெரிவு செய்திருந்தார். அமரர் ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற பற்றே அதற்கு காரணமாக இருந்தது. அக்காலப்பகுதியில் ஜி ஜி பொன்னம்பலம் மற்றும் செல்வநாயகம் ஆகிய இருவருமே தமிழ் அரசியலில் கோலோச்சிக்கொண்டிருந்தனர். ஜி ஜி பொன்னம்பலம் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான விநாயகமூர்த்தி பொன்னம்பலத்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தார். பொன்னம்மபலத்தின் தேர்தல் வெற்றிகளின் பின்னால் இவரது கடும் உழைப்பும் இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

ஜி ஜி பொன்னம்பலம் அவர்களின் மறைவின் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைமை பொறுப்பை அவரது மகன் குமார் பொன்னம்பலம் அவர்கள் ஏற்றார். ஏலவே குமாருடன் நீண்டகால நட்பு கொண்டிருந்த விநாயகமூர்த்தி அவர்கள் குமாருடன் இணைந்து மிகவும் ஆபத்தான காலகட்டங்களிலும் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடர்ந்தார். 21.12.1983 அன்று J R ஜயவர்தன அரசால் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரசை பிரதிநிதிபடுத்தி குமாரும் விநாயகமூர்த்தியும் பங்குபற்றினர். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழ் காங்கிரசின் சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டார். ஆனால் அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பிரச்சார நடவடிக்கைகளில் அவரால் ஈடுபட முடியாதுபோனது. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சார்பாக குமார் பொன்னம்பலம் தலைமையில் விநாயகமூர்த்திஇ கல்வியாளர் அதிபர் அருணாசலம் மற்றும் கலாநிதி குமரகுருபரன் ஆகியோர் கொழும்பில் போட்டியிட்டனர். ஆயினும் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பெரும்பான்மை கட்சிகளுக்கே வாக்கு செலுத்தியமையால் கொழும்பில் தமிழ் காங்கிரஸினால் பாராளுமன்ற பிரநிதித்துவம் எதுவும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

சட்டத்தரணி

நீதிமன்ற பதிவாளராக இருக்கையிலேயே கொழும்பு பல்கலை கழக சட்ட பீடத்தில் வெளிவாரி பட்டப்படிப்பை நிறைவு செய்த விநாயகமூர்த்தி அவர்கள் 1986 ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார். அன்று முதல் குமார் பொன்னம்பலம் அவர்களுடன் இணைந்து சட்ட தொழிலை ஆரம்பித்த அவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சட்டத்தரணியாக தொழில் புரிந்தார். அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்களுக்காக இலவசமாகவே வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தார். அவ்வாறு அவரால் விடுதலை பெற்றுக்கொடுக்கப்பட்டவர்களுள் முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களும் ஒருவராவார். 2004 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற விநாயகமூர்த்தி அவர்களின் 70 ஆவது பிறந்ததின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சந்திரசேகரன் அவர்கள் இவ்விடயத்தை மேடையில் நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அன்றைய காலப்பகுதியில் பயங்கரவாத தடை சட்டமானது அப்பாவி தமிழ் இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக பிரயோகிக்கப்பட்டது. பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்டு சிறைகளில் வாடினர். அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் நலனிற்காக விநாயகமூர்த்தி அவர்கள் இலவசமாக வாதாடினார். பிரதி சனிக்கிழமை தோறும் அவர் சிறைச்சாலைகளுக்கு சென்று கைதுசெய்யப்பட்டவர்களின் நலன் விசாரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அங்கு செல்லும் போது கைதிகள் வாசிப்பதற்காக பத்திரிகைகளையும் அவர்களின் உறவினர்களின் செய்திகளையும் தபால்களை எடுத்துச்செல்வார். ஒவ்வொரு சனிக்கிழமையையும் விநாயகமூர்த்தி அவர்களின் வருகையை எதிர்பாத்தவண்ணமே தாம் நாட்களை கழிப்பதாக விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள் தெரிவிப்பார்கள். பயங்கரவாத தடைசட்டத்தை சட்டப்புத்தகத்திலிருந்து நீக்குவதற்கு பாடுபடுவதையே தனது குறிக்கோளாக கொண்டிருந்த விநாயகமூர்த்தி அவர்கள் அவர் இறக்கும் வரை அதற்காக குரல் கொடுத்திருந்தார்.

அவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த உயர் நீதிமன்றத் தீர்ப்புகளாக இரு முக்கியமான வழக்குகளை குறிப்பிடலாம். விநாயகமூர்த்தி எதிர் இராணுவ தளபதி என்கின்ற வழக்கும் நாகமணி தெய்வேந்திரன் எதிர் சட்டமா அதிபர் என்கின்ற வழக்குமே அவையாகும். விநாயகமூர்த்தி எதிர் இராணுவ தளபதி என்கின்ற வழக்கில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச கொலையுடன் தொடர்பிருப்பதாக கூறி விமலேந்திரன் எனும் தமிழ் இளைஞன் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்ட ஏற்பாடுகளையும் மீறி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாமல் பனாகொட இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இவ்விளைஞன் சார்பாக தானே மனுதாரராக விநாயகமூர்த்தி அவர்களால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே இவ்வழக்காகும். மூன்று உயர் நீதியரசர்கள் கொண்ட குழாமினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கு சட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக தீர்க்கப்பட்டது. அரசியலைப்பின் உறுப்புரை 13 (1) மற்றும் 13 (2) இன் கீழ் இவ்விளைஞனிற்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதுடன் சட்ட ஏற்பாடுகளை மீறி எவரொருவரும் கைதுசெய்யப்படக்கூடாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இலங்கை சட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள இவ்வழக்கு இலங்கை சட்ட கல்லூரி பாடவிதானத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.

நாகமணி தெய்வேந்திரன் எதிர் சட்டமா அதிபர் என்கின்ற மற்றைய வழக்கில் தெய்வேந்திரன் என்கின்ற தமிழ் இளைஞன் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்றும் அவர் அவ்வமைப்பின் ஆயுத பயிற்சி பெற்றார் என்றும் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இவ்விளைஞனின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே அவரிற்கு எதிரான சாட்சியமாக அரச தரப்பால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. அதாவது அவ்விளைஞனால் எவ்வித கட்டாயத்தின்பேரிலுமல்லாது சுயமாக வழங்கப்பட்டதாக கூறப்பட்ட வாக்குமூலத்தை தவிர எவ்வித சாட்சியமும் அரச தரப்பிடம் இருக்கவில்லை. சம்மந்தப்பட்ட இளைஞர் சார்பாக விநாயகமூர்த்தி அவர்கள் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார். தற்போதைய வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மாத்திரம் சாட்சியமாக கொண்டு எவரையும் குற்றவாளியாக தீர்ப்பளிக்க முடியாதென தீர்ப்பளித்த நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் எவரையேனும் குற்றவாளியாக தீர்ப்பதற்கு குற்ற வாக்குமூலம் மாத்திரமன்றி அதனை உறுதிப்படுத்தும் வேறு சாட்சியமும் இருக்க வேண்டுமென்கிற சட்ட முக்கியத்துவம் வாய்ந்த சரித்திரப் பிரசித்திபெற்றதுமான தீர்ப்பை வழங்கினார். இதன் பின்னர் அவசரகால சட்டம் பற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களின் விடுதலைக்கு ஏதுவாக விநாயகமூர்த்தி அவர்களின் இவ்வழக்குகள் அமைந்திருந்தன.

கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்ட ஏராளமான தமிழ் இளைஞர்களின் சார்பாக நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து அவ்விளைஞர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்த விநாயகமூர்த்தி அவர்களே 1993 மற்றும் 1994ம் ஆண்டுகளில் குறிப்பிட்ட ஒரு வருடத்தில் இலங்கை நீதிமன்றங்களில் அதிகளவான ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்த சட்டத்தரணியுமாவார்

பல முக்கியமான வழக்குகளில் ஆஜரான அவர் பிரேமதாச கொலை வழக்குஇ லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்குஇ சந்திரிகா கொலை முயற்சி வழக்குஇ மத்திய வங்கி குண்டு தாக்குதல் வழக்குஇ கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் வழக்குஇ தலதா மாளிகை குண்டு தாக்குதல் வழக்குஇ ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொலை வழக்கு போன்ற வழக்குகளில் கைதுசெய்யப்பட்டவர்கள் சார்பாக ஆஜரானார்.

2001 இல் பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடனான சமாதான பேச்சுவார்த்தை காலப்பகுதியில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயம் எழுந்த பொழுதுஇ அது பற்றி தாம் விநாயகமூர்த்தியுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதாக விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டிருந்தார். விநாயகமூர்த்தி அவர்களின் சேவைக்கு இதைவிட சிறந்த ஒரு அங்கீகாரமாக வேறெதுவும் இருக்க முடியாது.

வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருக்கும் மக்கள் மீளவும் தமது இருப்பிடங்களிற்கு மீள்குடியமருவதற்கு விநாயகமூர்த்தி அவர்கள் பெரும்பாடுபட்டார். அவர்கள் சார்பாக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாக வாதாடி வந்தார். அவற்றில் சில வழக்குகள் தற்போதும் நிலுவையிலுள்ளது.

தமிழ் காங்கிரசின் தலைமை பொறுப்பும் பாராளுமன்ற பிரவேசமும்

05.01.2000 அன்று குமார் பொன்னம்பலம் அவர்கள் சிங்கள பேரினவாதிகளின் கைக்கூலிகளினால் பேடித்தனமாக கொழும்பில் வைத்து கொல்லப்பட்டார். குமாரின் மறைவு விநாயகமூர்த்தி அவர்களை மிகவும் பாதித்திருந்தது. தனது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பாகவே குமாரின் இழப்பை அவர் கருதினார். அப்போதைய சந்திரிகா தலைமையிலான அரசாங்கமே இக்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டுமென பகிரங்கமாகவே குற்றம் சாட்டிய விநாயகமூர்த்தி அவர்கள் குமாரின் கொலைக்கு நியாயமான நீதி விசாரணை கோரினார். ஆனால் இன்றுவரை குமாரின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது அவரை எப்போதுமே வருத்தத்திற்குள்ளாக்கியது.

குமாரின் இறப்பின் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு அவரது கட்சியினர் ஏகமனதாக கேட்டுக்கொண்டதற்கிணங்க விநாயகமூர்த்தி அவர்கள் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார். அதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு மார்கழி மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்திலே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றியது. விநாயகமூர்த்தி அவர்கள் கணிசமான வாக்குகளை பெற்று பாராளுமன்றிற்கு தெரிவானார். மூன்று தசாப்தங்களிற்கு பின்னர் தமிழ் காங்கிரசிற்கு யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்றுக்கொடுத்த பெருமை விநாயகமூர்த்தி அவர்களையே சாரும்.

ஒவ்வொரு மாதமும் அவசரகால சட்டம் பாராளுமன்றில் நீடிக்கும் பிரேரணை கொண்டுவரப்படும் போதெல்லாம் அதனை கடுமையாக எதிர்த்து வந்த விநாயகமூர்த்தி அவர்கள் அவசரகால விதிகளினால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் அவலத்தை அவசர கால சட்ட நீடிப்பு விவாதங்களின்போது எடுத்துக்காட்ட தவறுவதில்லை. ஒவ்வொரு மாதமும் வாக்கெடுப்பில் தவறாது கலந்து கொண்டு அவசரகால நீடிப்பு பிரேரணையை எதிர்த்து வந்தார். எனினும் இப்பாராளுமன்றம் ஒரு வருட காலமே நீடித்தது. முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதனால் பாராளுமன்றில் பெரும்பான்மையை இழந்த தனது அரசாங்கத்தை நம்பிக்கை வாக்கெடுப்பிலிருந்து காப்பாற்றுவதற்காக அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். அச்சந்தர்ப்பத்தில் சந்திரிக்காவிற்கு எதிராக பாராளுமன்றில் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தபோது அதற்கு விநாயகமூர்த்தி அவர்கள் ஆதவளித்ததுடன் அப்பிரேரணையை கொண்டுவருவதில் முன்னாள் அமைச்சர் டிரோன் பெர்னாண்டோவுடன் இணைந்து செயற்பட்டார். எனினும் இப்பிரேரணை கொண்டுவரப்பட முன்னரே சந்திரிகா பாராளுமன்றை கலைத்து புதிய போது தேர்தலுக்கு உத்தரவிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம்

இத்தேர்தலின் போது தமிழ் கட்சிகள் அனைத்தும் தம்மிடையிலான பேதங்களை மறந்து ஒற்றுமையாக ஒரு குடையின்கீழ் தேர்தலை எதிர்கொள்வதினூடாக தமிழர்களின் உரிமைகளை மீட்க போராடவேண்டுமென்ற கருத்து முன்வைக்கப்பட்டது. தமிழர் விடுதலை கூட்டணிஇ டெலோ இ ஈ பீ ஆர் எப் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொதுவான அரசியல் கட்டமைப்பை தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கான பேச்சுவார்த்தைகள் குமார் பொன்னம்மபலம் அவர்களின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றன. விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையில் தமிழ் 8 காங்கிரஸ் இப்பேச்சுவார்தைகளில் பங்குபற்றியது. கட்சியின் சின்னத்தை விடுத்து பொதுவான ஒரு சின்னத்தின் கீழ் போட்டியிடுவற்கு கட்சியில் எதிர்ப்பு எழுந்த போதும் தமிழர்களின் நலனே இன்றியமையாதது என்பதில் உறுதியாகவிருந்த அவர் கூட்டமைப்பை உருவாக்குவதில் உறுதியாக செயற்பட்டார். பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்ததன் பலனாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவானது. இக்கூட்டமைப்பின் கீழ் தமிழ் காங்கிரசின் சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட விநாயகமூர்த்தியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அமோக வெற்றியீட்டினர்.

இத்தேர்தலில் வெற்றிபெற்ற ரணில் விக்கிரமசிங்க தலையிலான அரசாங்கம் விடுதலை புலிகளுடன் சமாதான சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இதன்போது இரு தரப்பினரதும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக விடுதலை புலிகளின் வேண்டுகோளிற்கிணங்க விநாயகமூர்த்தி அவர்கள் முக்கிய பங்காற்றினார்.

தமிழ் காங்கிரசிலிருந்து வெளியேறல்

2010 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலானது விநாயகமூர்த்தி அவர்களின் இறுதித் தேர்தலாக அமைந்திருந்ததுடன் மட்டுமல்லாது அவரது அரசியல் வாழ்வின் ஒரு மைல்கல்லாகவும் அமைந்திருந்தது. ஏனெனில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தான் அங்கம் வகித்த அகில இலங்கை தமிழ் காங்கிரசை விட்டு வெளியேறுவது என்ற மிகவும் வருத்தத்திற்குரிய முடிவை அவர் இத்தேர்தலில் எடுக்க நேரிட்டது. தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு தமிழ் காங்கிரஸ் தீர்மானித்தது. தனது கட்சியின் இந்த முடிவுடன் விநாயகமூர்த்தி அவர்களால் உடன்பட முடியவில்லை. எக்காலகட்டத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை பாதுகாக்கப்படவேண்டுமென்பதில் விநாயகமூர்த்தி அவர்கள் மிகவும் தீவிரமாக இருந்தார். தமிழர்களின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் அவர்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு தமிழர்கள் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் செயற்படுவது இன்றியமையாதது என வலியுறுத்திய அவர் தனது கட்சியின் முடிவை மாற்றுவதற்கு பகீரத பிரயத்தனம் செய்தார். எனினும் அவரது முயற்சிகள் வெற்றியளிக்காததை தொடர்ந்து தாம் தமிழ் தேசிய அரசியலின் ஒற்றுமையை முன்னிறுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைமை பொறுப்பை ராஜினாமா செய்ததுடன் அவரது ஆதரவாளர்களின் விருப்பத்திற்கிணங்க தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே தொடர்ந்தும் இருப்பதற்கு முடிவு செய்தார்.

2010 சித்திரை மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட அவர் பெருமளவான வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்டினார். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதி தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற கணக்காய்வு குழுவான கோப் குழுவின் உறுப்பினராகவும் பணி புரிந்தார். 2015 இல் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரும் வரை பாராளுமன்ற உறுப்பினராக பணி புரிந்த அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. அரசியல்வாதிகள் மீது பொதுவாகவே சுமத்தப்படும் இலஞ்சம்இ அதிகார போதைஇ அதிகார துப்பிரயோகம் போன்ற எவ்விதமான குற்றச்சாட்டுகளும் அவரது எதிரிகளால் கூட ஒருபோதும் அவரிற்கு எதிராக சுமத்தப்படவில்லை என்பதே அவரது அரசியல் நேர்மையையும் தூய்மையையும் பறை சாற்றி நிற்கும். அன்னாரின் இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.

சட்டத்தரணிகள்

ஜனகன் தனபாலசிங்கம்
குமரேசன் புரந்தரன்

பெறாமக்கள்

கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 7 பேரின் மரணவிசாரணை வழக்கு நிறைவு – தீர்ப்பால் கொதிப்படைந்த மக்கள்!

– உயிர்களை காக்கும் கடமையில் தவறிய கவுண்சில் பணியாளர்கள் மீதும்ரூபவ் உண்மையை மறைக்க முயன்ற மரணவிசாரணை அதிகாரி மீதும் சட்ட நடவடிக்கை தொடரும்: சட்டத்தரணி கீத் குலசேகரம் –

கம்பர்சான்ட் (Camber Sand Beach) என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் தெற்கிலுள்ள பிரபல்யமான கடற்கரையொன்றில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உட்பட ஏழு பேர் நீரில் மூழ்கி இறந்தமை தொடர்பான மரணவிசாரணை வழக்கு கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றுரூபவ் நேற்றயதினம் நிறைவுக்கு வந்துள்ளது. இறுதியில் தீர்ப்பை வழங்கிய மரணவிசாரணை அதிகாரிரூபவ் அரச தரப்பின் தவறுகளை மறைத்துரூபவ் இறந்தவர்கள் மீதே பழியை சுமத்தும் விதத்தில் ‘விளையாட்டு வினையானது’ (Misadventre) என்ற தீர்ப்பை வழங்கினார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் மிகவும் கொதிப்படைந்தனர்.

கடந்த யூலை 24ஆம் திகதி பிரேசில் நாட்டைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய குஸ்ராவோ சில்வா டா குறூஸ்; காம்பர்சான்ட்சில் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்தார். இதனை அவதானித்த மோகிட் டுபார்ரூபவ் வயது 36ரூபவ் அவரைக் காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் இறுதியில் இருவருமே இறந்துபோனார்கள்.

இச்சம்பவம் நடந்ததுரூபவ் சரியாக ஒரு மாதத்தில்ரூபவ் அதாவது ஓகஸ்ற் 24ஆம் திகதி அன்றுரூபவ் ஐந்து தமிழ் நண்பர்கள் அதே கடற்கரையில் நீரில்மூழ்கி பரிதாபமாக இறந்துபோனார்கள். தென்மேற்கு இலண்டனை சேர்ந்த கென் எனப்படும் கேணுகன் சத்தியானந்தன்ரூபவ் வயது 18ரூபவ் இவரது சகோதரானரூபவ் கோபி எனப்படும் கோபிகாந்தன் சத்தியநாதன்ரூபவ் வயது 22ரூபவ் மற்றும் இவர்களது நண்பர்களானரூபவ் நிதர்சன் ரவிரூபவ் வயது 22ரூபவ் இந்துசன் சிறிஸ்காந்தராசாரூபவ் வயது 23ரூபவ் குருசாந்த சிறிதவராஜாரூபவ் வயது 27 ஆகிய நண்பர்களே இந்த சம்பவத்தில் இறந்து போனவர்களாவர்.

இவர்கள் சார்பில்ரூபவ் சட்டவாளர்களானரூபவ் பற்றிக் றொச்சிரூபவ் மாசியா வில்ஸ் ஸ்ருவேட்ரூபவ் கிலாரி நெல்சன்ரூபவ் ரொலு அக்பிலுசி மற்றும் கீத் குலசேகரம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

வெளிப்பார்வைக்கு மிகவும் அழகாக தென்படும் கம்பர்சான்ட் கடற்கரையில் மிகவும் பயங்கரமான ஆபத்துக்கள் மறைந்துள்ள. ஆழிப்பேரலையால் உருவாகும் மணல் திட்டுக்கள் அங்கு வரும் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கின்றன. மக்கள் அந்த மணல் திட்டுக்களில் விளையாடும் போதுரூபவ் அவை திடீரென வரும் அலைகளால் அள்ளிச்செல்லப்படுகின்றன. அதனால் மக்கள் கடலில் மூழ்கியோ மண்ணில் புதையுண்டோ இறக்க நேரிடுகின்றது. ஆனால் இது பற்றி போதிய எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்ரூபவ் உயிர்காப்பு பணியாளர்களை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறியிருந்தனர். இதனால் 2012 இற்குப் பின்னான நான்கு வருடங்களில் கம்பர்சான்ட் ஒன்பது மரணங்கள் நிகழ்ந்துள்ள.

‘இக்கடற்கரை ஆபத்து பிரதேசம் எனவும் இங்கு உயிர்காப்புப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்தவேண்டும் எனவும் றோயல் தேசிய உயிர்காப்புப் படகு நிறுவனம் ((RNLI)) 2013 இலும் 2016 இலும் பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும் இதனை புறக்கணித்ததன் மூலம் றோதெர் மாவட்டசபையின் அதிகாரிகள் கடமை தவறியிருந்தனர். கடந்த ஓகஸ்றில் நடந்த ஐந்து நண்பர்களின் மரணத்தின் பின்னரே அங்கே உயிர்காப்புப் பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள்’ என மூத்த வழக்குரைஞரான பற்றிக் றொச்சி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கடந்த ஐந்து நாட்கள் சட்டவிசாரணையில் ரூடவ்டுபட்ட மூத்த மரணவிசாரணை அதிகாரியான அலன் கிறேஸ் தன்னுடைய தீர்ப்பில் பின்வருமாறு கூறினார்: ‘கடற்கரையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 2013 இல் றோயல் தேசிய உயிர்காப்புப் படகு நிறுவனம் வழங்கிய பரிந்துரைகளில் உயிர்காப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படவேண்டும் என்பதும் அடங்கியிருந்தது. ஆனால் இப்பரிந்துரை அமுல்ப்படுத்தப்படவில்லை. அவ்வாறு பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தால்ரூபவ் இம்மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமா என்பது உண்மையில் தெரியாதுரூபவ் ஆனால் தற்போது அங்கே உயிர்காப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றார்.’

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சட்டத்தரணி கீத் குலசேகரம்ரூபவ் ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இழைத்த பாரதூரமான தவறை சுட்டிக்காட்ட மறுத்தது மட்டுமல்லாமல்ரூபவ் இறந்தவர்கள் மீதே பழியை சுமத்தும் விதத்தில் தனது தீர்ப்பை வழங்கியிருப்பது மரணவிசாரணை அதிகாரியின் மீது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது’ என்றார். அத்துடன் ‘உயிர்களை காக்கும் கடமையில் தவறிய கவுண்சில் பணியாளர்கள் மீதும்ரூபவ் உண்மையை மறைக்க முயன்ற மரணவிசாரணை அதிகாரி மீதும் சட்ட நடவடிக்கை தொடரும்’ எனவும் தெரிவித்தார்.

இறுதியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்ரூபவ் குருசாந்த் சிறிதவராஜாவின் சகோதரியான கபினுஜா சிறிதவராஜா பின்வருமாறு கூறினார்: ‘எங்கள் ஐந்து சகோதரர்களும் கடற்கரையில் பாதுகாப்பாக இருப்போம் என்ற நம்பிக்கையில்தான் அன்றைய தினம் கடற்கரைக்குச் சென்றார்கள். ஆனால் காணாமற்போன சிறுவர்களைத்தான் கடற்கரை ரோந்தினர் தேடிக்கொண்டிருந்தார்கள். ஆபத்துப்பற்றி அவர்கள் நீந்திக்கொண்டிருந்தவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதாக நீதிமன்றில் பொய்ச்சாட்சி வழங்கப்பட்டது. கடற்கரையில் கிட்டத்தட்ட 25>000 மக்கள் நின்றுகொண்டிருந்தார்கள். வெறும் எட்டு அதிகாரிகளே பணியிலிருந்தார்கள். எவ்வாறு இந்த எட்டு அதிகாரிகளால் 25>000 மக்களையும் எச்சரிக்கமுடியும்?

அன்றைய தினம் உயிர்காப்புப் பணியாளர்கள் யாருமே பணியிலிருக்கவில்லை. நாங்கள் எங்களுக்காக் கதைக்கவில்லைரூபவ் ஆனால் எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறக்கூடாது என்பதற்காகவே இங்கே கதைத்துக்கொண்டிருக்கின்றோம். எங்கள் சொந்தங்களை நாங்கள் இழந்துவிட்டோம். எங்கள் வாழ்க்கை தற்போது அர்த்தமில்லாமலே இருக்கின்றது. இக்கொடுமை எதிர்காலத்தில் யாருக்கும் நடக்கக்கூடாது. உயிர்காப்புப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்துமாறு 2013இலேயே பரிந்துரைக்கப்பட்டதுரூபவ் ஆனால் யாருமே அதற்குச் செவிசாய்க்கவில்லை. எங்களைப் பாதுகாக்கத் தவறியதுடன்ரூபவ் எங்களிடம் மன்னிப்புக்கூடக் கேட்காத கவுண்சில் பணியாளர்கள் தங்கள் வேலைகளை இராஜினாமா செய்யவேண்டும்’ என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மிகவும் உணர்ச்சிவசமாக கண்ணீருடன் தெரிவித்தனர்.

error: Content is protected !!