SHARE

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் இலங்கையில் தற்போதும் சித்திர வதையும் பாலியல் வன்முறையும் தொடர்கிறது என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதிப்படுத்தி புதிய அறிக்கை ஒன்றை International Truth and Justice (ITJP) என்ற மனித உரிமைகள் நிறுவனம் வெளியிடவுள்ளது.

UNSTOPPED: Torture by the Sri Lankan Security Forces in 2016/17 என்ற பெயரில் வெளியாக உள்ள இந்த அறிக்கை, 2016 மற்றும் 2017 காலப்பகுதில் இடம்பெற்ற சித்திரவதைகள் பற்றிய ஆதாரங்களின் அடிப்படையில் அமையவுள்ளது.

முன்னாள் ஐநா நிபுணர்களில் ஒருவரான ஜஸ்மின் சூகா (Yamin Sooka) தலைமையில் இயங்கிவரும் International Truth and Justice (ITJP) என்ற நிறுவனம் முன்னாள் ஊடகவியலாளரான பிரான்சிஸ் கரிசன் (Frances Harrison) மற்றும் சட்டத்தரணிகளான அருண் கணநாதன் (Arun Gananathan) மற்றும் கீத் குலசேகரம் (Geeth Kulasegaram) ஆகியோரின் பங்களிப்புடன் இந்த வெளியீட்டு நிகழ்வு 14.07.2017 அன்று மாலை 4 மணிக்கு Garden Court Chambers என்ற பிரபல அலுவலகத்தில் இடம்பெற உள்ளது. இதற்கான அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டு நிகழ்வின் ஏற்பாட்டாளரகளில் ஒருவரும், பிரபல சிரேஷ்ட சட்டத்தரணியுமான திரு அருண் கணநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில இலங்கை பாதுகாப்பு படையினர் தமிழர்களை கடத்துவதும் சித்திரவதை செய்வதும் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. புதிய அரசு பதவிக்கு வந்து 30 மாதங்கள் கடந்தும் குறித்த வலையமைப்புக்களை கலைக்க தவறி விட்டன. மிகப்பெரிய இராணுவ முகாம்களில் உள்ள சித்திரவதை கூடங்கள்;, மனித கடத்தல்கள் அச்சுறுத்தி இலஞ்சப் பணம் பறித்தல் போன்ற விடயங்கள் இந்த குற்ற செயல்களில் அடங்கியுள்ளன. இவ்வகையான குற்றங்களுக்கு புதிய அரசு அரசால் ஒருபோதும் பொறுப்புக்கூறாது. எனவே இந்த விடயங்களை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தி இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம் என தெரிவித்தார்.

இந்த அறிக்கையின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தவரும், மனித உரிமை; சட்டத்தரணியுமான திரு. கீத் குலசேகரம் கருத்து தெரிவிக்கும் போது 2016, 2017 காலப்பகுதில் சித்திரவதை இடம்பெற்று வருவதை பிரித்தானிய நீதிமன்றங்களே ஏற்றுக்கொண்டு வருகின்றன. ஆயினும் பிரித்தானியா தழிழர் பேரவை (BTF) மற்றும் உலகத் தமிழர் பேரவை (GTF) ஆகிய அமைப்புக்கள் புதிய அரசின் கைக்கூலிகளாக மாறியிருப்பது மட்டுன்றிரூபவ் இலங்கையில் தற்போது கடத்தல்களோ சித்திரவதைகளோ நடைபெறுவதில்லை என்றும், அரசியல் தஞ்சம் பெறும் நோக்குடன் தமிழ் இளைஞர்கள் தமக்கு தாமே காயங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்று ஐ.நா மற்றும் சர்வதேச விசாரணையாளர்களை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு தெரிவிப்பதன் மூலமும், முக்கிய சாட்சியங்கள் மீது அவதூறுகளை பரப்பிவருவதன் மூலமும் இலங்கை அரசை காப்பாற்றி வருவற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தமக்கு மிகவும் அதிர்ச்சியை தருகின்றது எனவும் தெரிவித்தார். மாற்று இனத்தவரான ஜஸ்மின் சூக்கா,பிரான்சிஸ் கரிசன் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இருக்கும் கரிசனை கூட, எம் இனத்தின் விடுதலைக்கு போராடுவதாய் கூறும் இது போன்ற அமைப்புகளுக்கு இல்லாமல் போயிருப்பது தமக்கு மிகவும் வேதனையளிப்பதாகவும், இப்படியான பெரும் துரோகத்தை இழைத்து வரும் இப்படியான அமைப்புகளை மக்கள் இனங்கண்டு புறந்தள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email