SHARE
image_pdfPRINT

சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகை யாரால் எப்படி, எந்த அடிப்படையில் அகற்றப்பட்டது என்பது தொடர்பில் உடனடியாக ஆய்வு அறிக்கை அனுப்பும்படியும், சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகையை மலையடிவாரத்தில் மீண்டும் பொருத்தும்படியும் நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு பணித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிவனடிபாதமலை (சிவனொளி பாத மலை) எனும் தமிழ் பெயர் நீக்கப்பட்டு ஸ்ரீபாத எனும் சிங்கள பெயரே தமிழிலும் எழுதப்பட்டு மலையடிவாரத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

அது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்ததுடன் கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன. அந்நிலையிலையே அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.