SHARE
image_pdfPRINT

ஈழத் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை உலகிற்கு உரக்க சொன்ன “பொங்குதமிழ்” பிரகடண நினைவுக்கல் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட இந் நினைவு தூபி துணைவேந்தர் விக்கினேஸ்வரால் திறந்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ்த்தேசியம்  ஆகியன அங்கீகரிக்கப்பட வேண்டுமென இராணுவ முற்றுகைக்குள் முன்னெடுக்கப்பட்டிருந்த பொங்குதமிழ் நிகழ்வு நினைவாக யாழ் பல்கலை வளாகத்தில் இப்  “பொங்குதமிழ் பிரகடன நினைவுத்தூபி” அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.