SHARE

வீரகேசரியின் முன்னாள் நிருபர் – ப.சுகிர்தன்

‘தடுப்பு முகாமிலிருந்து வந்த முன்னாள் போராளி திடீர் மரணம்’ இலங்கையின் நாளாந்த பத்திரிகைகளை தற்போது ஆக்கிரமித்து வரும் செய்தி இது.

இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அல்லது சரணடைந்து பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலரின் மரணம் திடீரெனவும் மர்மமான முறையிலும் நிகழ்தேறிவருகின்றது.

போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஒரு விதமான “ஊசி” ஏற்றப்பட்டதன் விளைவே முன்னாள் போராளிகளின் திடீர் மர்ம மரணங்களிற்கு காரணம் என குற்றச்சாட்டப்பட்டுகிறது.

சம்பவம்

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது இஇராணுவத்திடம் சரணடைந்து தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கிராமத்தில் தனது குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்தார்.

சமூகத்துடன் இணைக்கப்பட்ட இவர் தனது மனைவியிடம் தனக்கும் தடுப்பு முகாமில் ஊசி போட்டார்கள். அப்படியானால் தானும் விரைவில் இறந்துவிடுவேன் என பல தடவைகள் கூறியிருக்கின்றார்.

நாளாந்த வாழ்க்கையை அச்சதுடனும் நிரந்தமற்ற தன்மையுடனும் கழித்து வந்த அவர் ஒரு முறை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சித்திருந்தார்.

இவ்வாறு இந்த விச ஊசி விவகாரம் புணர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை மட்டுமல்லாது அவர் சார்ந்த குடும்பங்கள் உறவினர்களையும் உளவியல் ரீதியில் மிகவும் பாதிப்படைய வைத்துள்ளது. நாளை என்ன நடக்குமோ என்ற பீதியுடன் அவர்களில் வாழ்கை நகரவேண்டிய நிலையில் உள்ளது.

இவ்வாறு முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 130 ற்கு அதிகமானோர் புற்றுநோய்இ காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள்.

சுமார் பத்தாயிரம் என்கிற அளவில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளில்இ 130 என்பது கணிசனமான எண்ணிக்கையாகும். அப்படியான நிலையில்இ இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவது இயல்பானவை.

குறிப்பாக, புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாகவும் மெல்லக் கொல்லும் விசம் உணவில் கலக்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும் அந்தச் சந்தேகங்கள் அலையாக மேலெழும்பின.
புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமாரன் புற்றுநோயின் தாக்கத்தினால் மரணமானார். அவரின் மரணத்தை அடுத்தே விச ஊசி விவகாரம் கூடுதல் கவனம் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக விச ஊசி விவகாரம் அனைத்துத் தளங்களிலும் உரையாடப்படும் விடயமாக மாறியது. இந்த நிலையில்இ வடக்கில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் அமர்வு ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் போராளியொருவர், புனர்வாழ்வு முகாம்களில் தமக்கு தடுப்பு ஊசி என்று தெரிவிக்கப்பட்டு விச ஊசி ஏற்றப்பட்டதாகவும் அதனால்இ மரணங்கள் அங்கேயே சம்பவித்ததாகவும் உணவில் விசம் கலக்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அப்படியாயின் தடுப்பு முகாம்களில் இரசாயன உணவு மற்றும் ஒரு வகை மருந்து கலக்கப்பட்ட ஊசிகள் ஏற்றப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியுள்ள நிலையில் புனர்வாழ்வு பெற்ற பல போராளிகள் உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போதிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுஇ அவர்களின் எதிர்கால வாழ்வுஇ காப்புச் செய்யப்பட வேண்டும் என்பது அடிப்படையானது. அதனை யாருமே கேள்விக்குட்படுத்த வேண்டியதில்லை.

ஆனால், அந்த விடயத்தைக் கையாளும் போது மிகுந்த கவனமும் பொறுப்புணர்வும் வேண்டும். எனினும், அது இங்கு சாத்தியப்படுத்தப்படவில்லை என்பதுதான் பெரும் பிரச்சினை.

விச ஊசி விவகாரம் பொது உரையாடல் தளத்துக்கு வந்ததும்இ அரசியல்வாதிகளும் கருத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு எவ்வகையான கருத்துக்களைச் சொன்னால் ஊடகக் கவனம் பெறலாம் என்பது மிகத் தெளிவாகத் தெரியும்.
ஏனெனில்இ இப்போதெல்லாம் அரசியல்வாதிகளின் கருத்துக்குப் பின்னாலுள்ள விடயங்கள் பற்றி பெரிதாக ஊடகங்கள் கவனிப்பதில்லை. மாறாக, பரபரப்பு விடயமாக இருக்கின்றதா? அது போதும் என்பதே அடிப்படையாகிப் போயுள்ளது. அதுதான், அரசியல்வாதிகள் விச ஊசி விவகாரத்தில் எல்லா மாதிரியும் கருத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள். இது முன்னாள் போராளிகளை மேலும் மேலும் பயமுறுத்தியதுடன் அவர்களை உளவியல் ரீதியாக குழப்பமடைய செய்துள்ளது.

வடக்கு மாகாண சபையிலும் விச ஊசி விவகாரம் பேசப்பட்டது

முன்னாள் போராளிகளுக்குச் சர்வதேச மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானம் முக்கியமானது; வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால்இ தீர்மானத்தினை நிறைவேற்றிய பின்னர் வடமாகாண சபை போராளிகள் குறித்த அக்கறையை உணர்வு ரீதியாகக் கையாண்டதா என்பது மனவருத்தத்தின் உச்சமாக மாறியது.

அமெரிக்க விமானப் படையின் மருத்துவக்குழு யாழ்ப்பாணத்தில் மருத்துவ முகாமொன்றை நடத்துவதற்காக அண்மையில் வந்திருந்த போது அவர்கள் இந்த விச ஊசி தொடர்பில் முன்னாள் போராளிகளை பரிசோதனை செய்வதற்கு தயாராக உள்ளனர் என வடமாகாணசபை அறிவித்தது.

வட மாகாண சபையின் அக்கறையை நம்பிய முன்னாள் போராளிகள் அங்கு சென்று மணிக்கணக்கில் காத்திருந்து எதுவும் நிகழாது ஏமாற்றத்துடன் திரும்பினர். பரிசோதனைக்குரிய உபகரணங்களை எடுத்து வரவில்லை என அமெரிக்க மருத்துவ குழு காரணம் சொன்னது.

புனர்வாழ்வு காலத்தில் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி செலுத்தப்பட்டிருந்தால், அது போர்க்குற்றங்களில் ஒன்றாக பதிவுசெய்யப்பட வேண்டிய அவசியம்முள்ளது. அப்படிப்பட்ட நிலையில் சாதாரண மருத்துவ முகாமை நடத்த வந்த அமெரிக்கர்களிடம் பரிசோதிக்குமாறு கோருவது உணர்வுநிலையில் எடுத்த முடிவின் பிரதிபலிப்பாகவே தெரிகின்றது. இலங்கையும் அமெரிக்காவும் போர்க்குற்ற விடயமொன்றை அவ்வளவு இலகுவாகக் கையாள அனுமதிக்குமா என்ற விடயத்தை ஏன் இங்கு சிந்திக்கமுடியாது போனது.

போர்க்குற்ற ஆதாரமாக உறுதி செய்யதல்

முன்னாள் போராளிகளை இவ்வாறு அங்கு பரிசோதனை இங்கு பரிசோதனை என அவர்களை அலைய விடுவதால் அவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து போவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

எனவே இந்த விவகாரத்தை எவ்வாறானதொரு முறையில் கையாளலாம் என நோக்கினால் அது இலகுவானதொரு வழியை காட்டுகிறது. புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் முன்னாள் போராளிகளிடம் முதலில் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.

ஏனெனில் புலம் பெயர் தேசங்களில் அதற்கான வசதி வாய்ப்புக்கள் அதிகம். ஆதனை புலம் பெயர் தேசங்களில் வெற்றிகரமாக செய்து சரியான பேறுபேறுகளை பெறும் பொருட்டில் அதனூடாக தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தாயகத்தில் உள்ளவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த முடியும்.

இதுவே நம்பிக்கை தரும் உண்மைத்தன்மையுடன் கூடிய பரிசோதனை நடவடிக்கையாக இருக்கும். ஏனெனில் பரிசோதனை முடிவுகளில் உண்மையிலேயே விச ஊசிகள் ஏற்றப்பட்டமை உறுதிசெய்யப்படுமாயின் அவற்றை சர்வதேச ரீரிதியாக கையாள முடியும். இதனால் இது ஒரு போர்க்குற்ற ஆதாரமாகவும் உறுதிசெய்து கொள்ள முடியும்.

இன்னுமொரு இன அழிப்பு

சிங்களப்பேரினவாதத்தின் அடுத்தகட்ட இன அழிப்பின் நகர்வாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. 2009 ஆண்டு இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களில் பலர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கூட இன்றுவரை பதில் சொல்லப்படாத கேள்வியாகவே தொடர்கிறது.

போராளிகளின் சமூக இன பற்றை அழிக்கும் உளவியல் போர் ஒன்றே புனர்வாழ்வு என்ற தடுப்பு – வாதை முகாமின் நோக்கமாகும். அத்துடன் வதைமுகாமின் அறிவிப்பு, முள்வேலி, படைகளின் அணுகுமுறை, வழங்கப்படும் உணவு, தங்கியிருந்த அறைகள், பிரிக்கப்பட்ட முறைகள் எனப் பலவும் நூதனமாக அக வாதைகள் சார்ந்தது என்பதை வெற்றிச் செல்வி தன்னுடைய ஆறிப்போன காயங்களின் வலி (பம்பைமடு வதை முகாம் தொடர்பான பதிவு) புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

திருகோணமலையில் சிங்கள அரசின் பாரிய இன அழிப்பு வதைமுகாங்கள் இருந்த விவகாரமமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பல முன்னாள் போராளிகளும் ஈழ மக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளும் வந்து பார்வையிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் தன்னை தப்பிக்க வைக்க முனைப்பெடுத்த இலங்கை அரசு கைது செய்யப்பட்டவர்களை தாங்கள் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்துள்ளோம் என்பதை காண்பிக்க ஒரு தொகுதியினரை விடுதலை செய்தது.

ஆனால் புனர்வாழ்வு என்னும் பெயரில் அவர்களை உளவியல் ரீதியில் மிகவும் குழப்பமடைய செய்தே சமூகத்துடன் இணைத்துள்ளார்கள். புனர்வாழ்வு என்ற சொல் பதமே முதலில் அவர்களை உளவியல் ரீதியில் தாக்கமடைய செய்து விடுகிறது. எவ்வாறு தான் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும் புனர்வாழ்வு என்ற சொல் அவர்களை தனிமைப்படுத்தி அடையாளம் காட்ட வைக்கிறது.

ஏற்கெனவே சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு சீண்டுவாரற்று இருக்கின்ற முன்னாள் போராளிகளை மேலும் மேலும் பயமுறுத்துவதற்கான காரணியாகவும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்கான முனைப்புக்களும் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே விச ஊசி விவகாரத்தின் முடிவு எவ்வாறு அமையுமென்று தெரியாது. அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்களிடம் ஒட்டுமொத்தமாக முன்னாள் போராளிகளின் உடல்களில் விசம் கலக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் மெல்லமெல்ல மரணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு திருமணமோ, எதிர்காலமோ சாத்தியமானதல்ல என்கிற உணர்நிலையொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இது, தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களைச் செய்துவிட்டு இன்றைக்கு யாருக்காக போராடினார்களோ அவர்களினாலேயே புறக்கணிக்கப்பட்டு நடைப்பிணங்களாக இருக்கும் முன்னாள் போராளிகளின் மனநிலையை இன்னும் இன்னும் பாதிக்கும். இதனை, வவுனியாவில் அண்மையில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் அமர்வு ஒன்றில் முன்னாள் போராளி ஒருவரும் பிரதிபலித்திருந்தார்.

இதேவேளை, விச ஊசி விவகாரத்தை ஊடகங்கள் மிகவும் பொறுப்பாகக் கையாள வேண்டும். ஏனெனில், அது சுமார் பத்தாயிரம் முன்னாள் போராளிகளின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விடயம். இறுதி மோதல்கள் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. முன்னாள் போராளிகளின் வாழ்வில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இன்னமும் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புக்கள் தொடர்கின்றன.

எனவே மக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள இந்த விச ஊசி வவிவகாரம் தொடர்பிலான தெளிவான உண்மைப்படுத்தல் அவசியம். இந்த விடயத்தில் இருக்கின்ற உண்மை என்ன என்பது மிக நேர்த்தியான – இதய சுத்தியுடனான தரம் மிக்க மருத்துவப் பரிசோதனை ஒன்றின் மூலமே உறுதிப்படுத்தப்பட முடியும்.

இதே வீரர்கள் அன்று களத்தில் சண்டையிட்டு சந்தனப் பேழைகளில் கொண்டு செல்லப்பட்டபோது நிறையுவும் சிந்தித்தோம். நிறையவும் கவலைப்பட்டோம்.
இன்றும் அவர்கள் ஒரு களத்தில் வீழ்கின்றனர் என்ற நுண் அரசியலை புரிந்துகொள்ள மறுக்கிறோம்.

இந்தக் கூட்டு மரணங்கள் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவுதும் எடுக்கப்படவில்லை. எல்லாமே சாதாரண மரணங்கள்தான் என கடந்து செல்லும் அரச இயந்திரத்தை விடுவோம். நாம் என்ன செய்கிறோம்??

Print Friendly, PDF & Email