SHARE

”இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு வழங்கியமை சரியான முடிவென”  தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள  கட்சி அலுவலகத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சரியான முடிவு. பிழையான விடயத்தை இந்திராகாந்தி செய்ய மாட்டார்.

ஆரம்பத்தில் கச்சதீவை ஒருவரும் தேடவில்லை. ஆரம்பத்தில் இலங்கை நெடுந்தீவு மீனவர்களும், இந்திய மீனவர்களும் கச்சை தீவுக்கு சென்றுவருவது வழமை.

எனினும் சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த காலத்தில் அவர், விடுதலைப்புலிகளால் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்து இந்தியப்பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

பொதுவேட்பாளர் என்று சொல்பவர்கள் 2004ம் ஆண்டு 26 ஆசனங்கள் வைத்திருந்தபோது இனப்பிரச்சனையை தீர்த்திருக்க முடியும். மக்கள் இறக்கின்ற போது வாய் திறக்காதவர்கள் இப்பொழுது பொதுவேட்பாளர் பற்றிப் பேசுகின்றனர்” வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email