SHARE

இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும்,  பிரதிப் பொலிஸ் மா அதிபருமான  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 109 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் 24 மணி நேரமும் செயல்படும் எனவும், பாதிக்கப்படும் நபர்கள் எந்நேரமும் பொலிஸாரைத் தொடர்புகொண்டு உதவிகோர முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email