SHARE

தமிழ் மொழியையும் தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளையும் வரலாற்று நீட்சியையும் கொண்டாடும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21.01.2024) இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவம் (TIC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD), கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை , சறோ தமிழ் கல்விக்கூடம், New Malden Town Centre Partnership, Kingston Upon Thames ஆகியன இணைந்து நடாத்தும் மேற்படி தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டம், ஞாயிற்றுக்கிழமை Jubilee Square, New Malden KT3 4TA எனும் இடத்தில் முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெறவுள்ளது.

தமிழர் கலை கலாச்சார பண்பாடுகளை முற்று முழுதாக வெளிக்கொணரும் இக் கொண்டாட்டத்தில் தமிழ் கலைகளான பறை இசைஇ நாதஸ்வர-தவில் இசை, கோலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம்இ புலியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், மற்றும் கும்மி பாட்டு, தெருக்கூத்து, நாட்டுக்கூத்து என்பன நூற்றுக்கும் அதிகமான கலைஞர்களால் இங்கிலாந்தின் வீதியூடாக ஆடப்பட்டு கோலகல பவணியாக இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்தை சென்றடையவுள்ளன.
இதில் இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நம் கலைகளோடும் பாரம்பரியங்களோடும் தைத்திருநாளை கொண்டாடுவதற்கு பிரித்தானியா வாழ் மக்கள் அனைவரையும் அழைத்து நிற்கின்றனர் விழா ஏற்பாட்டு குழுவினர்.

தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளையும் பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியாவில் தமிழர் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது

Print Friendly, PDF & Email