SHARE

டிலக்‌ஷன் மனோரஜன்

தமிழீழ தேசிய கொடி நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருவது தமிழீழப் பரப்பில் வாழும் அத்தனை தமிழர்களும் அறிந்தது.

அந்த வகையில் பிரித்தானியாவின் மையப்பகுதியான Trafalgar Square நேற்றையதினம் (19 நவம்பர்) ஆயிரக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழர்களின் உணர்வு எழுச்சியுடன் சிறப்பாக இடம்பெற்றது.

எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது.

தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றிவைக்கப் பெற்றது.

அன்று தொடக்கம் இன்று வரை தமிழீழ தேசிய கொடிநாள் ஆனது உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்ச்சி உடன் அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email