SHARE
image_pdfPRINT

முல்லைத்தீவு, வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன்போது உயிரிழந்த பாடசாலை மாணவிகள் 54 பேர் உட்பட கொல்லப்பட்ட 61 பேரின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா ஏ9 வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் 2367வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகையினுள் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.