SHARE

”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து  யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று  ஈடுபட்டனர்.

கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 ஆவது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரியே  இவ்வாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது  ”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. பொலிஸார்  சட்டவிரோத செயற்பாடுகளைக்  கட்டுப்படுத்துவதில்லை இராணுவத்தின் மீதே எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை மாற்றுவதாக இருந்தால், அரச காணியில் உள்ள இராணுவ முகாமை அமையுங்கள்” எனப்  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

Print Friendly, PDF & Email