SHARE

ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் ஐபிசி வானொலியில் ஊடக பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதன் தனது 75 ஆவது வயதில் லண்டனில் மரணமடைந்துள்ளார்.

தனது வீட்டில் இருந்து நேற்று (01.08.2023) நடை பயிற்சிக்காக வெளியில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இலங்கை வானொலியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த விமல் சொக்கநாதன் பின்னர் பிபிசி தமிழோசையில் பணிபுரிந்த விமல் சொக்கநாதன் அதன் பின்னர் ஐபிசி வானொலி ரி.ரி.என் தொலைக்காட்சி, ஜிரிவி தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தொலைக்காட்சி ஆகிய புலம்பெயர் ஊடகங்களில் செய்தி மற்றும் நடப்புவிவகார தளத்தில் தனித்து சேவையை வழங்கியவர் ஆவார்.

விமல் சொக்கநாதனின் மரணம் புலம்பெயர் ஊடகத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அவரது மறைவை முன்னிறுத்திய இரங்கல் செய்திகளை அவரது ஊடகத்துறை நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Print Friendly, PDF & Email