SHARE
image_pdfPRINT

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான 6வது கட்ட போராட்டம் நேற்று ஆரம்பமாகிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டகளத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மக்களது காணிகளில், அனுமதியின்றி இந்த விகாரை அமைக்கப்பட்ட நிலையில் மக்களது நிலங்களை மீள வழங்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.