SHARE

டிலக்‌ஷன் மனோரஜன்
(பிரித்தானியா)

தமிழினத்தின் மிதான சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையான 1983 ஆவது கறுப்பு யூலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நாளில் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களால் கண்டன எழுச்சி பேரணி நடைபெற்றது.

தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் நடந்தேறி 40 வருடங்கள் உறுண்டோடிவிட்டன. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரோடு ரயர்கள் போட்டு எரித்து கொல்லப்பட்டதுடன் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பல சூறையாடப்பட்டுஇ கொழும்பில் அனைத்து தெருக்களிலும் இயங்கிய தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள்இ தமிழர்களின் வீடுகள் மற்றும் வாழ்விடங்கள்இ வாகனங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையிலேயே இந்த மாபெரும் இனப்படுகொலை நடைபெற்று 40 ஆண்டுகள் ஆன இன்றைய நாளில் நீதி கோரி பிரித்தானிய பிரமரின் வாசஸ்தலத்திற்கு முன்னாள் ஒன்று திரண்ட சுமார் நூற்றுக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்த்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தை பபிஷன் போல்ராஜ், அயுட்சன் அருள்தாஸ், செல்வரஞ்சன் துஷாந்தன், சதேந்லொயிற்றன், புயலேந்திரன், சிவானந்தராசா தனோஜன், கணேசலிங்கம் எபினேசர், பிரகலாதன் சிவகுருநாதன், ஞானசேகரம் யனார்த்,
கணேசன் பிரசன்னா, தர்மராசா பிந்துசன் ஆகிய செயற்பாட்டாளர்கள் முன்னின்று செயற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email