மனித புதைகுழிகள் குறித்து வெளியாகியுள்ள கூட்டறிக்கை
கடந்தகால பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் சிறிலங்கா அரசு சிரத்தையாக இருக்குமாயின் சிறிலங்காவிலுள்ள பாரிய மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் அனைத்திலும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென சிறிலங்காவிலுள்ள காணாமல் போன குடும்பங்களுடன் இணைந்து பணியாற்றும் 5 குடியியல் சமூகக் குழுக்கள் கூட்டாக தெரிவித்துள்ளன.
தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்ட இயங்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்திற்கான அமையம் (ITJP), இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடக அமையம் (JDS) மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி மையம் (CHRD) மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அமைப்பு (FOD) ஆகிய மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து சிறிலங்காவிலுள்ள பாரிய மனிதப் புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும் எனும் தலைப்பில் இலங்கையில் மூடிமறைக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டிருந்தனர்.
இதில் இலங்கைத்தீவ முழுவதிலும் உள்ள பாரிய மனித புதைகுழிகளை தோண்டி ஆய்வு செய்வதில் இலங்கை தொடர் தோல்விகளை சந்தித்து வருவதுடன் கடந்த மூன்று தசாப்தங்களாக வெறும் 20மனித புதைகுழிகளே தோண்டப்பட்டுள்ளன. அதேவேளை இதுவரையில் எந்த குடும்பத்திற்கும் தங்களது அன்புக்குரியவர்களது மனித எச்சங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளதுடன் சிறிலங்காவில் அமைக்கப்பட்ட ஏராளமான விசாரணை ஆணைக் குழுக்களில் ஒன்றுகூட பாரிய மனிதப் புதைகுழிகளை விசாரணை செய்வதற்கான ஆணையைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் தடைப்பட்டுள்ளன. நீதிபதிகளும், தடயவியல் நிபுணர்களும் திடீர் இடமாற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர், நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதை காவல்துறை தாமதப் படுத்தியுள்ளது, குடும்பங்களின் சட்டவாளர்கள் புதைகுழிகள் உள்ள இடங்களுக்குப் போவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது, தற்போதும் உயிருடன் உள்ள சாட்சிகளைக் கண்டறிவதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதையும் விளக்கி நிற்கின்றது.
இந்நிலையிலலேய இக் கூட்டறிக்கையை வெளியிட்ட மேற்படி மனித உரிமைகள் அமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு முக்கிய பரிந்துரைகளை விடுத்துள்ளன. அதில அதில் பாரிய மனித புதைகுழி அகழ்வுகளை மேற்கொள் சட்டத்தினையும் கொள்கையினையும் இயற்றுதல் முன்மொழியப்பட்டுள்ள சட்டக் கட்டமைப்பு, கொள்கை, மற்றும் பாரிய மனிதப் புதைகுழிகள் மீதான நியம செயற்பாட்டு நடைமுறைகள் என்பன தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இதர சர்வதேச வல்லுனர்கள் உட்பட, வெளிப்படையான ஆலோசனை செயற்பாடு ஒன்றினை மேற்கொள்ளுதல் பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பானது உள்ளிட்ட நாட்டிலுள்ள தடயவியல் ஆய்வுத்திறனை மேம்படுத்தல். ‘தேவையான நிபுணத்துவம் கிடைக்கும் வரை’ அகழ்வுப் பணிகளை இடை நிறுத்துவதற்காக காணாமற்போனவர்கள் மீதான அகில இலங்கை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் அலுவகத்தை மீள்கட்டமைப்புச் செய்தல், சுயாதீன வழக்குத்தொடரும் சேவையொன்றினை உருவாக்கி, அகழ்வுப் பணிகளின் முடிவுகள் தொடர்பான வழக்குகள் விசாரணைகள் சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்ற முறையிலும் இடம்பெறுகின்றன என்பதை உறுதிப்படுத்தல் ஆகிய கோரிக்கைளை முன்வைத்துள்ள.
இதனிடையே இன்று வெளியாகியுள்ள மனித புதைகுழிகள் தொடர்பான கூட்டறிக்கை குறித்து கருத்து தெரிவித்த ITJP யின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா, 30 ஆண்டுகள் கடந்த நிலையிலும் உண்மையை கண்டறிவதற்காகவும் நீதியை பெறுவதற்காகவும் நாங்கள் போராடிக்கொண்டிருக்க வேண்டிய நிலையிலேயே இருக்கின்றது. பெரும் அட்டூழியங்களில் ஈடுபட்ட கோத்தபாய ராஜபக்ஷ உட்பட்டவர்கள் உடனடியாகவே பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் உள்நாட்டுப் போரில் நடந்த பாரிய அட்டூழியங்களும் தண்டனை விலக்களிப்புக்களும் தவிர்க்கப்பட்டிருக்கும். பொறுப்புக்கூறல் என்பது ஒரு விருப்பத் தெரிவான நடைமுறையல்ல. மாறாக சிறிலங்காவின் அனைத்து மக்களதும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இது அவசியமானதாகும் என்று தெரிவித்தார்.