SHARE
image_pdfPRINT

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான கவனயீர்பு போராட்டம்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம்(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது “மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்”, “பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் தாங்கியவாறு அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.