SHARE
image_pdfPRINT

சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை வழங்க மேலும் நான்கு நாடுகள் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தரவாதத்தை வழங்கியுள்ளன.

இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று புதன்கிழமை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.