SHARE

நாளையதினம் இடம்பெறவுள்ள பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதுடன் வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் இடம்பெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,

”பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசியர்கள் அதிபர்கள் உட்பட அனைத்து அரச ஊழியர்களும் இடர்பாட்டிற்குள் இருக்கின்றோம்.  இந்நிலையில், எமது சம்பள உயர்வினை கோரி நாளையதினம் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றோம்.

சுபோதினி ஆணைக்குழுவின் படி மூன்றில் ஒருபகுதி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மீதி அதிகரிப்பு இன்றுவரை வழங்கப்படவில்லை. இப்போது பொருளாதார சுமை அதிகரித்துள்ள காலத்தில் அதனை வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்ப்பாடுசெய்யவேண்டும்.

அல்லது இருபதாயிரம் ரூபாய் இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்காவது நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.

அத்துடன் அரசினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் நீக்கப்படவேண்டும். இவற்றை வலியுறுத்தி நாளையதினம் அடையாள பணிபகிஸ்கரிப்பை முன்னெடுப்பதுடன், நாளையதினம் காலை9.00மணிக்கு வவுனியா பழையபேருந்து நிலையத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அதில் அனைத்து ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களை கலந்துகொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம்” என்றனர்.

Print Friendly, PDF & Email