SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கெருடாவில் தெற்கு தொண்டைமானாற்றைச் சேர்ந்த ஆரன் பாலசிங்கம் ஏன 71 வயதுடையவரின் உடலே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்தே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.