SHARE

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என பல தரப்பினரும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் நேற்று (புதன்கிழமை) பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

வர்த்தக சபை உறுப்பினர்கள், தொழில் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்துக்களை மீளாய்வு செய்ததன் பின்னர் ஆணைக்குழுவின் தீர்மானம் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email