SHARE

வடக்கும் – கிழக்கும் தமிழர் தாயகம் என்ற உரிமைக்கான பேரணி பல்கலைக்கழக மாணவர்கள் மதத்தலைவர்கள் சிவில் அமைப்புக்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்களின் பேர் எழுச்சியுடன் 4 ஆவது நாளன இன்று மட்டக்களப்பில் நிறைவு கண்டது.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கு என்ற கோரிக்கைளை வலியுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூகங்களினால் கடந்த 4 ஆம் திகதி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

சிறிலங்காவின் சுதந்திர தினத்தன்று ஆரம்பமான இப்பேரணி கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலையூடாக பேர் எழுச்சியுடன் பயணித்து 4 ஆவது நாளான இன்று மட்டக்களப்பு வெபர் மைத்தானத்தில் நிறைவு கண்டது. இதில் இறுதியாக பல்கலைக்கழக மாணவர்களால் கொள்கைப் பிரகடணமும் வாசிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email