SHARE
image_pdfPRINT

சிறிலங்காவின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடணப்படுத்தி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி ஆரம்பமான மக்கள் எழுச்சி போராட்டம் முதல் நாளான இன்று கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது.

சிறிலங்காவின் சுதந்திர தினமான இன்று தமிழர் தாயகம் எங்கும் பூரண கர்த்தாலுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சிவில் அமைப்புக்களால் அழைப்பு விடுக்கபட்டதுடன் இன்று யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி சுதந்திர தின எதிர்ப்பு பேரணியும் ஆரம்பமானது.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கு என்ற கோரிக்கைளை வலியுத்தியே இந்த மாபெரும் பேரணி இன்று ஆரம்பமானது.

பொலிஸார் மற்றும் இராணுவத்தின் தடைகள் அச்சுறுத்தல்களை மீறி பெருந்திரளான மக்கள் எழுச்சியுடன் யாழ் பல்கலைக்கழத்திலிருந்து ஆரம்பமான இப்போராட்டம் இன்று கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது.

இந்நிலையில் 2 ஆவது நாளை பரந்தன் ஊடாக முல்லைத்தீவு நோக்கி பயணித்து பின்னர் மறுநாள் திருகோணமலை நோக்கி பயணிக்கவுள்ளது.