SHARE
image_pdfPRINT

யாழில் இன்று 77 பேர், தமது உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பாக பதிவிட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக அதிகாரிகளினால் மாவட்டங்கள் தோறும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இன்று பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது குறித்த பதிவு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இடம்பெற்ற அதேநேரம் ஒரு சிலர் அதிகாரிகளிடம் பதிவுகளை மேற்கொண்டனர்.

அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு பயணக்கொடுப்பனவாக ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.