SHARE
image_pdfPRINT

அரச மற்றும் அரச அனுசரணையுடனான தனியார் பாடசாலைகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகளின், மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி மூன்றாம் தவணையின், இரண்டாம் கட்டம், ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.