SHARE

பயங்கரவாதிகளின் அபிமானி என யஸ்மின் சூக்காவை கூறியமைக்காக பெருந்தொகை இழப்பீடு செலுத்தினார்

சர்வதேச உண்மை மற்றும் நீதித்திக்குமான செயற்திட்டத்தின் பணிப்பாளர் (ITJP) யஸ்மின் சூக்காவிற்கு எதிராக பொய்யான தகவல்களை வெளியிட்ட கோட்டபாயாவின் நெருங்கிய சகாவும் அவருடைய அரசியல் கட்சியின் பிரித்தானியப் பிரதிநிதியாக அண்மைவரை செயற்பட்டவருமான ஜெயராஜ் பாலிகவதன நிபந்தனைகளற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

பொய்யான அறிக்கை ஒன்றினை தயாரித்து ஜெனிவா செயலகங்களுக்கு அனுப்பி வைத்தது மட்டுமல்லாது தன்னை பயங்கரவாதி என குறிப்பிட்டமைக்கு எதிராக யஸ்மின் சூக்காவினால் பிரித்தானியாவில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே, ஜெயராஜ் பாலிகவதன பகிரங்க மன்னிப்பு கோரியதுடன் பெருந்தொகை நட்ட ஈட்டினையும் வழங்கியுள்ளார். அத்துடன் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் இணையத்தில் ஒரு மன்னிப்பை வெளியிடவும் அவர் இணங்கியுள்ளார்.

ITJP யின் பணிப்பாளரும் உலகப்புகழ் பெற்ற சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞரும் நிலைமாறு நீதியின் வல்லுனருமான யஸ்மின் சூக்கா தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழு ஒன்றுக்கு ஆதரவாக செயற்படுகிறார் என பொய்யான தகவலைக்கூறி அறிக்கை ஒன்றை தயாரித்த ஜெயராஜ் பாலிகவதன, அதனை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெனிவாவிலுள்ள 41 இராஜதந்திர செயலகங்களிற்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையிலேயே தனது நற்பெருக்கு கேடுவிளைவிக்கும் தவறான தகவல்களை வெளியிட்டமையை எதிர்த்து 2018 தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சூக்கா வழக்கு ஒன்றியை பிரித்தானியாவில் தொடுத்திருந்தார்.

அதில் இக்குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானவை என்பதுடன் சிறிலங்காவின் மனித உரிமைகளை பாதுகாக்கும் தன்னுடைய பணிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே தோன்றுகிறது. மனித உரிமைப் பாதுகாவலர்களை பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று கொச்சைப்படுத்துவது உலகிலுள்ள அடக்குமுறை ஆட்சியாளர்கள் அடிக்கடி பயன்படுத்தி வந்த தந்திரம் என்பதையும் இந்த நீதிமன்றிற்கு பெரும்பாலும் தெரிந்திருக்கும் எனஉ யர் நீதிமன்றிற்கு வழங்கிய தன்னுடைய வாக்கு மூலத்தில் சூக்கா தெரிவித்திருந்தார்.

இது குறித்து ITJP நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை – https://itjpsl.com/assets/Final-Yasmin-Sooka-Press-Release-13-Dec-2022.docx-1.pdf

Print Friendly, PDF & Email